Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வசூலில் தூள் கிளப்பும் பொன்னியின் செல்வன்.. வைரலாகும் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

ps1-reached-500-crores-viral details

தென்னிந்திய சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் மணிரத்தினம். இவரது இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி என பல முக்கிய பிரபலங்கள் இணைந்து நடித்து வெளியான பிரம்மாண்ட திரைப்படம் பொன்னியின் செல்வன். உலகம் முழுவதும் கொண்டாடப்பட்ட இந்த திரைப்படம் தொடர்ந்து வசூல் சாதனை செய்து தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்து வருகிறது.

அந்த வகையில் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி வெளியான இப்படம் தற்போது வரை திரையரங்கில் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் உலக அளவில் ரூ.500 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இன்னும் சில தினங்களில் ரூ.600 கோடிக்கு மேல் இப்படம் வசூலை வாரி குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 ps1-reached-500-crores-viral details

ps1-reached-500-crores-viral details