Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மணிரத்னம் கேட்ட கேள்வியால் கஷ்டப்பட்ட சரத்குமார். அப்படி என்ன சொல்லியிருக்கிறார் பாருங்க..

ps2-audio-launch-sarath-kumar-speech

தென்னிந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத பிரபல இயக்குனராக திகழும் மணிரத்தினம் அவர்களின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

மாபெரும் நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்திருக்கும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா, நேர உள் விளையாட்டு அரங்கத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த நடிகர் சரத்குமார் இயக்குனர் மணிரத்தினம் குறித்து பகிர்ந்து இருக்கும் தகவல் வைரலாகி வருகிறது. அதில் அவர், “நான் இரண்டு முறை காதலித்து திருமணம் செய்தவன். என்னை பார்த்து உனக்கு ரொமான்ஸ் வருமா? என்ற கேள்வியை மணிரத்தினம் கேட்டார், அதுதான் கஷ்டமா போச்சு” என்று காமெடியாக கூறியிருக்கிறார்.

ps2-audio-launch-sarath-kumar-speech
ps2-audio-launch-sarath-kumar-speech