Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பொன்னியின் செல்வன் 2 படத்திலிருந்து அக நக வீடியோவை வெளியிட்ட படக்குழு

ps2 movie aganaga-song-video-viral

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத மாபெரும் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் மணிரத்தினம். இவரது இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் என மாபெரும் நட்சத்திரபட்டாலங்கள் இணைந்து நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்த இப்படம் உலக அளவில் ரூ.300 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்த நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட்டாக ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்திருந்த ‘அகநக’ என்னும் பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அது தற்போது இணையத்தில் பயங்கரமாக வைரலாகி வருகிறது.