தென்னிந்திய சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் மணிரத்தினம். இவரது இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி என பல முக்கிய பிரபலங்கள் இணைந்து நடித்து கடந்த செப்டம்பர் மாதம் வெளியான பிரம்மாண்ட திரைப்படம் பொன்னியின் செல்வன்.
உலகம் முழுவதும் கொண்டாடப்பட்ட இந்த திரைப்படம் தொடர்ந்து வசூல் சாதனை செய்து தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்துள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால், இதே சூட்டோடு பொன்னியின் செல்வன் 2 ஆம் பாகத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பும் அண்மையில் வெளியாகி இணையதளத்தில் வைரலானது.
இந்நிலையில் இந்த படத்தின் சிறப்பு அப்டேட்டை இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் பார்த்திபன் தனது twitter பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறார். அதில் அவர், பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி இருப்பதை புகைப்படத்துடன் பதிவிட்டு ட்வீட் செய்துள்ளார். அது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
Good morning 3rd persons!
Guess what’s happening for what ?
1 Clue is 2 pic.twitter.com/CxSkb5H92z— Radhakrishnan Parthiban (@rparthiepan) January 3, 2023