தென்னிந்தியா சினிமாவில் மாபெரும் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் மணிரத்தின. இவரது இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி 500 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்து தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்திருந்த திரைப்படமாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியானது.
லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் பல உச்ச நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருந்த இப்படத்தின் இரண்டாம் பாகம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இம்மாதம் வரும் 28ஆம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாக உள்ளது. ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தின் அப்டேட்களை படக்குழுவினர் தொடர்ந்து வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில் பூங்குழலியை தொடர்ந்து சோபிதா நடித்திருக்கும் வானதி கதாபாத்திரத்தின் மேக்கிங் வீடியோவை புதிய தகவலுடன் வெளியிட்டுள்ளது.
அதன்படி படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் இப்படத்தின் அடுத்த பாடலான ‘வீரா ராஜ வீரா’ என்னும் பாடலின் லிரிக்ஸ் வீடியோ விரைவில் வெளியாக இருப்பதாக தெரிவித்துள்ளது.
Love, loyalty, and beauty – see them all come together in the BTS of our #SobhitaDhulipala turning into #Vanathi.
Stay tuned!
A pure and enchanting #VeeraRajaVeera awaits!In cinemas worldwide from 28th April in Tamil, Hindi, Telugu, Malayalam, and Kannada!#CholasAreBack… pic.twitter.com/e0vHiRbtXd
— Lyca Productions (@LycaProductions) April 7, 2023