Tamilstar
News Tamil News

கோவில்களை உடனே திறங்கள்!முதல்வருக்கு கலப்பை மக்கள் இயக்கம் பி.டி. செல்வகுமார் வேண்டுகோள் !

கொரோனா பாதிப்பால் பாதிக்கபட்ட மக்களுக்கு கலப்பை மக்கள் இயக்கம் தொடர்ந்து உதவி வருகிறது. இன்று கோவில் நடைபாதை வியாபாரம் செய்யும் 110 பெண்களுக்கு கலப்பை மக்கள் இயக்கம் பி.டி. செல்வகுமார் அரிசி மூட்டைகளை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் வழங்கினார்.

மேலும் தமிழகம் முழுவதும் கோவில்களை திறக்க வேண்டும் என்று தமிழக முதல்வர்,அறநிலையத்துறை அமைச்சர், மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு மனுக்கள் வழங்கினார். அவர் பத்திரிகையாளர்களிடம் பேசிய போது ….

இங்கே 100 அபலை பெண்களின் சார்பாக வேண்டுகோள் வைக்கிறேன்.புதுப்பாக்கம் வீர ஆஞ்சநேயர், திருப்போரூர் முருகன் கோவில்,சிங்கப்பெருமாள் கோவில் போன்ற அனைத்து வழிபாட்டு ஸ்தலங்களும் கடந்த 60 நாட்களாக கொரோனா பிரச்சனையால் மூடி கிடக்கின்றன.

பக்தர்கள் குறிப்பாக பெண்கள் கோயில்களுக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடப்பதால் மனஉளைச்சலில் உள்ளனர் இதனால் வீட்டில் எதிர்மறை சக்திகளால் சண்டை சச்சரவுஏற்பட்டு பலரும் மனநோயாளிகள் ஆகும் அளவிற்கு தள்ளப்பட்டு வருகிறார்கள்.

உலகிலேயே இந்தியா சிறந்த இறைநம்பிக்கை மிகுந்த நாடு . மக்கள் நம்பிக்கையோடு இறைவனை வேண்டினால் நாட்டின் மக்களின் பிரச்சினைகள் அனைத்தும் விலகும். கண்ணுக்கு தெரியாத கொரோனா என்ற எதிரியை ஒழிக்க ஒன்றுபட்ட மக்களின் இறைவழிபாடு அவசியமாகிறது.

அது மட்டுமின்றி காலை மாலை அனைவரும் குளித்து சுத்தமாக கோயிலுக்கு வருவதால் சுகாதார பிரச்சினை எழாது . குறிப்பாக கோயில் வருமானத்தை மட்டுமே நம்பியுள்ள பூஜாரிகள், ஆயிரக்கணக்கான நடை பாதை வியாபாரிகள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். அது மட்டுமின்றி அரசுக்கு வரவேண்டிய கோடிக்கணக்கான காணிக்கை வரவு தடைபட்டுள்ளது.

ஆகவே மாண்புமிகு. முதலமைச்சர் அவர்களும், மாண்புமிகு அறநிலையத்துறை அமைச்சர் அவர்களும், கலெக்டர் பெருமக்களும் கோவில்களை திறந்து மக்கள் வழிபட வழி செய்ய வேண்டும்.

தவறினால் ஆயிரகணக்கான பெண்கள், பொது மக்கள் உதவியுடன் கலப்பை மக்கள் இயக்கம் போராடும். உண்ண உணவின்றி,செலவுக்கு பணமின்றி, வேலை தொழில் செய்ய வழியின்றி அணுஅணுவாக சித்திரவதை அனுபவிக்கிறார்கள்.

அவர்களுக்கு ஆறுதலையும், நிம்மதியையும் தருவது கோவில்கள் மட்டுமே.கொரோனா விழிப்புணர்வு அனைத்து மக்களிடமும் ஏற்பட்டிருக்கிறது.

எனவே கட்டுப்பாடுடன் கண்ணியத்துடனும் நடந்து கொள்வார்கள் .தாங்களும் தகுந்த பாதுகாப்பு ,கட்டுப்பாடுகளுடன் ஆலயங்கள், மசூதிகள் தேவாயங்களை திறந்து மக்களுக்கு நிம்மதியை தாருங்கள் .இவ்வாறு பி.டி செல்வகுமார் பேசினார்.

மாவட்ட கலெக்டரிடம் மனு வழங்கிய போது .கலப்பை மாநில ஒருகிணைப்பாளர் V.K.வெங்கடேசன்,வழக்கறிஞர் மதியழகன்,, சமூக ஆர்வலர் வேண்டரசி, ஆட்டோ ஒட்டுனர் சங்க செயலாளர் மீனாட்சி, மதுராந்தகம் ரவி, தேவதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்…இந்த நிகழ்வில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து அனைவருக்கும் முககவசம் வழங்கப்பட்டது.