அல்லு அர்ஜுன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘புஷ்பா’. சுகுமார் இயக்கும் இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இப்படம் செம்மரக்கடத்தலை மையமாக வைத்து உருவாகி வருகிறது. அல்லு அர்ஜுன் லாரி டிரைவராக நடித்துள்ள இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் வில்லனாக நடிக்கிறார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட உள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்த படக்குழு, தற்போது முதல் பாகத்தின் ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்டுள்ளது.
அதன்படி புஷ்பா படத்தின் முதல் பாகம் வருகிற டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி திரையரங்குகளில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Pushpa – The Rise to release in five languages this Christmas.
పుష్ప പുഷ്പ புஷ்பா ಪುಷ್ಪ पुष्पा pic.twitter.com/bSSF9qfGGY
— Allu Arjun (@alluarjun) August 3, 2021