Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

குயின் 2 படப்பிடிப்பு தொடங்கியதை புகைப்படத்துடன் உறுதி செய்த ரம்யா கிருஷ்ணன்.. வைரலாகும் போட்டோ

queen 2 movie shooting spot photos

நடிகையாக இருந்து ஆளுமைமிக்க அரசியல்வாதியாக உயரும் ஒரு பெண்ணின் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட வெப் தொடர் தான் ‘குயின்’. இயக்குனர் கவுதம் மேனன், பிரசாந்த் முருகேசனுடன் இணைந்து இயக்கிய இத்தொடரின் முதல் பாகம் ரசிகர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

மேலும், ரேஷ்மா கட்டலா, கவுதம் மேனனுடன் இணைந்து இயக்கும் ‘குயின்’ இரண்டாம் பாகம் கொரோனா தொற்றின் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.

இதன் படபிடிப்பு தொடங்கிவிட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இதனை உறுதிப்படுத்தும் விதமாக ரம்யா கிருஷ்ணன் படப்பிடிப்பு தளத்தில் உள்ள புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டு “ஆம்,ஆம்,ஆம்” என்ற மறைமுக கேப்ஷனையும் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களால் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

queen 2 movie shooting spot photos
queen 2 movie shooting spot photos