தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஜெய். சசிகுமார் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான சுப்பிரமணியபுரம் திரைப்படத்தில் ஜெய் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
இந்த படம் சமீபத்தில் ரி ரீலீஸ் செய்யப்பட்டது. இதற்காக அதிகாலை காட்சி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் ஜெய் உட்பட குழுவினர் இதனை கண்டு களித்தனர். அதன் பிறகு ஜெய் செய்தியாளர்களை சந்தித்தபோது சுப்ரமணியபுரம் படம் ரிலீஸ் ஆனபோது அதிகாலை காட்சி கிடைக்கவில்லை. தற்போது கிடைத்தது மகிழ்ச்சியை தருகிறது என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ஜெய் காரில் ஏற முயற்சி செய்த போது பத்திரிக்கையாளர் ஒருவர் தளபதி 68 படத்தில் நீங்க விஜய்க்கு தம்பியா நடிக்கிறீர்களா என் கேள்வி எழுப்பினார்.
இதனால் கார்ல ஏறும் போது இப்படி பண்ண கூடாது என ஜெய் கோபப்பட்டு உள்ளார். நீங்கள் கேள்வி கேட்கும் போது காரில் ஏறி உட்கார்ந்தால் பதில் சொன்னால் அது தப்பாகி. விடும். அதற்கான நேரம் வரும்போது சொல்கிறேன் அப்போது வந்து கேளுங்கள் என்று பதில் சொல்லி விட்டு கிளம்பிச் சென்றுள்ளார்.