Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விஜய் சேதுபதி படத்தில் இருந்து திடீரென விலகிய அதிதிராவ் – காரணம் இதுதான்

Raashi Khanna replaces Aditi Rao

நடிகர் விஜய் சேதுபதி தற்போது ‘துக்ளக் தர்பார்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்குகிறார். லலித்குமார் தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் தொடங்கி கொரோனா பரவலால் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதில் கதாநாயகியாக காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம் படங்களில் நடித்துள்ள அதிதிராவை ஒப்பந்தம் செய்திருந்தனர். படத்தின் தொடக்க விழா பூஜையிலும் அவர் கலந்துக் கொண்டார். தற்போது ஊரடங்கு தளர்வால் துக்ளக் தர்பார் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் துக்ளக் தர்பார் படத்தில் இருந்து அதிதிராவ் திடீரென்று விலகி விட்டார். கொரோனா ஊரடங்கினால் ஏற்பட்ட கால்ஷீட் குளறுபடிகளால் தற்போது இன்னொரு படத்தில் நடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு ஏற்பட்டு உள்ளது என்றும், இதனாலேயே விஜய் சேதுபதியுடன் நடிக்க தேதி ஒதுக்க முடியாமல் படத்தில் இருந்து விலகி விட்டார் என்றும் கூறப்படுகிறது.

இதையடுத்து அதிதிராவுக்கு பதிலாக விஜய் சேதுபதி ஜோடியாக நடிக்க ராஷி கண்ணாவை தேர்வு செய்துள்ளனர். நடிகை ராஷி கண்ணா ஏற்கனவே சங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.