Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இணையத்தில் லீக்கான ராயன் படத்தின் கதை. தீயாக பரவும் தகவல்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தனது ஐம்பதாவது படத்தை இயக்கி நடித்து வருகிறார்.

இந்த படத்திற்கு ராயன் என தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இந்த படத்தில் தனுஷ் உடன் இணைந்து சந்தீப் கிஷன், எஸ் ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இதுவும் வன்முறையை கதைக்களமாக கொண்ட ஒரு படம் தான் என சொல்லப்பட்டு வந்த நிலையில் படத்தின் கதை குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது தனுஷ், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் அண்ணன் தம்பிகளாக நடித்திருப்பதாக சொல்லப்படுகிறது.

இவர்கள் மூவரும் ஒரு பாஸ்போர்ட் கடையை நடத்தி வந்தாலும் அடிப்படையில் கேங்ஸ்டர்களாக இருந்து வருகின்றனர். இவர்கள் இப்படி ஆனதற்கான காரணம் என்ன? எஸ் ஜே சூர்யா அவர்களுக்கும் இடையே நடக்கப் போவது என்ன என்பதுதான் இந்த படத்தின் கதை என தகவல் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.

Raayan movie latest update
Raayan movie latest update