தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ராயன். தனுஷின் ஐம்பதாவது திரைப்படமாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக்கியுள்ள இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.
எஸ் ஜே சூர்யா, சந்தீப் கிஷன், செல்வராகவன் என பலர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர்.
தற்போது இந்த படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. மேலும் இந்த படம் வரும் ஜூலை 26 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.