தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் ராதா ரவி. அண்மையில் அவர் சென்னையிலிருந்து ஊட்டி கோத்தகிரியில் உள்ள தன் சொகுசு பங்களாவுக்கு தன் குடும்பத்துடன் சென்றிருக்கிறார்.
தற்போது கொரோனா ஊரடங்கு நிலவி வருவதால் சுகாதாரத்துறையை சேர்ந்தவர்கள் நேரில் சென்று விசாரித்துள்ளனர். பின் அவர் பயணத்திற்கான முறையான அனுமதி பெற்று தங்கயிருப்பது தெரியவந்துள்ளது.
மேலும் அவருடன் இருந்த குடும்பத்தாருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட பின் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் அவரின் பங்களாவில் கொரோனா தனிமைப்படுத்துலுக்கான ஸ்டிக்கர் ஒட்டபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
ஆனால் நடிகர் ராதா ரவி தற்போது இதை மறுத்துள்ளார். பேட்டியில் அவர் கோத்தகிரிக்கு ஓய்வெடுக்க வந்தேன். தேவையில்லாமல் வதந்தியை பரப்புகிறார்கள் என கூறியுள்ளார்.