தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராதிகா. இவர் நடிகர் சரத்குமாரை திருமணம் செய்து கொண்டு அவருடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் ராகுல் என ஒரு மகன் இருக்கிறான்.
மலேசிய கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்த இவர் தற்போது தன்னுடைய படிப்பை முடித்து பட்டம் பெற்றுள்ளார். இந்த பட்டமளிப்பு விழாவில் ராதிகா, சரத்குமார் என இருவரும் கலந்து கொண்டுள்ளனர். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ராதிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு மகன் பட்டம் பெற்ற விஷயத்தை மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டுள்ளார்.
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ராதிகா சரத்குமாரின் மகனா இது? இந்த அளவிற்கு வளர்ந்து விட்டார் என ஆச்சரியத்தோடு கமெண்ட் அடித்து வருகின்றனர்.
View this post on Instagram