Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ராதிகாவின் திடீர் அறிவிப்பு… ரசிகர்கள் அதிர்ச்சி

Radhika's sudden announcement ... shocked the fans

ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘சித்தி’ தொடரின் இரண்டாம் பாகம் தனியார் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில் முக்கியக் கதாபாத்திரம் ஏற்று நடிகை ராதிகா நடித்து வந்தார். இந்நிலையில் சீரியல் நடிப்பிலிருந்து விலகுவதாக அறிவித்து இருக்கிறார். இது சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக ராதிகா தரப்பில் கூறும்போது, ”சில வாரங்களுக்கு முன்பே எடுத்த முடிவுதான் இது.

அடுத்தடுத்த சில காலம் தீவிர அரசியலில் கவனம் செலுத்த இருப்பதால் ராதிகா இந்த முடிவை எடுத்துள்ளார். சினிமா நடிப்பில் எப்போதும்போல கவனம் செலுத்துவார். அதேபோல, அவரது தயாரிப்பில் ஒளிபரப்பாகி வரும் ‘சித்தி 2’ சீரியல் தொடர்ச்சியாக ஒளிபரப்பாகும். அவர் சீரியலில் நடிப்பதை மட்டுமே தற்போது நிறுத்தியுள்ளார். என்றார்.