தமிழ் சினிமாவின் நடிகரும் இயக்குனருமான வலம் வருபவர் டான்ஸ் மாஸ்டர் ராகவா லாரன்ஸ். இவரது நடிப்பில் காஞ்சனா 3 திரைப்படம் வெளியாகி இருந்தது.
மேலும் இவர் நடிகர் அக்ஷய் குமாரை வைத்து காஞ்சனா படத்தின் ஹிந்தி ரீமேக்கை இயக்கி உள்ளார். லட்சுமி பாம் என்ற பெயரில் இப்படம் உருவாகி உள்ளது.
இப்படம் தியேட்டரில் வெளியாகி மாபெரும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தியேட்டர்கள் மூடி வைக்கப்பட்டுள்ளதால் OTT வழியாக வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டிஸ்னி பிஐபி ஹாட் ஸ்டாரில் இந்தப் படம் வெளியாக இருப்பதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ராகவா லாரன்ஸ். ஆனால் இப்படத்தின் ரிலீஸ் தேதியை இன்னும் அறிவிக்கவில்லை.
கூடிய விரைவில் இதுபற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.