Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

“தலைவர் என் குரு தளபதி என் நண்பன்”: ராகவா லாரன்ஸ் ஸ்பீச்


தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது ஜீ தமிழ், இதில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகவும் பாப்புலான ஒன்றாக இருந்து வருகிறது.

ஒவ்வொரு வாரமும் இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு விதமான ரவுண்ட் நடத்தப்பட்டு வரும் நிலையில் இந்த வாரம் ரெட்ரோ ஹிட் ரவுண்ட் நடைபெற உள்ளது, 70 மற்றும் 80-களில் ஹிட்டான ரெட்ரோ பாடல்களை தேர்வு செய்து பாட உள்ளனர், நடுவர்கள், பார்வையாளர்கள், போட்டியாளர்கள் என அனைவரும் இதே கெட்டப்பில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.

சிறப்பு விருந்தினர்களாக ராகவா லாரன்ஸ், சந்தோஷ் நாராயண் ஆகியோர் பங்கேற்கின்றனர். இது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது, இந்த நிலையில் ஷூட்டிங்கின் போது நடந்த சுவாரஷ்யமான விஷயங்கள் குறித்து தெரிய வந்துள்ளது.

அதன்படி ராகவா லாரன்ஸ் ஜெயிலர் படம் பற்றியும் லியோ படம் பற்றியும் விமர்சனத்தை சொல்ல என்ன ரெண்டு படத்தையும் விட்ட கொடுக்காமல் பேசறீங்க என்று கேள்வி எழுப்பி உள்ளனர், உடனே அவர் தலைவர் என் குரு, தளபதி என் நண்பன் என பதில் கொடுத்ததாக சொல்லப்படுகிறது.

அதனை தொடர்ந்து அவருக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுக்க 12 வயது பிரைன் டுயூமர் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டு வந்த விஷயத்தை பதிவு செய்துள்ளார். சந்தோஷ் நாராயணன் ஒரு கட்டை நாற்காலி தன்னுடைய வாழ்க்கையில் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்து பதிவு செய்துள்ளார். ஒரு வேளை சாப்பாட்டிற்கு கூட பட்ட கஷ்டங்கள் குறித்தும் பதிவு செய்துள்ளார்.

விறுவிறுப்பாக நடந்து முடிந்த இந்த ரவுண்டில் ராகவ் பிரசாத் மற்றும் பிரவீன் ஆகியோர் எலிமினேட் ஆனதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் நிகழ்ச்சியிலேயே மிகவும் சுவாரஷ்யமான ரவுண்டாக இந்த வார எபிசோட் இருக்கும் என நிகழ்ச்சி குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Raghava Lawrence speech Viral
Raghava Lawrence speech Viral