ராகியில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
சிறுதானிய உணவுகளில் ஒன்றாக இருப்பது கேழ்வரகு. இதில் இட்லி தோசை ரொட்டி செய்து சாப்பிடலாம். இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறது.
மேலும் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை கரைத்து உடல் எடை குறைக்க மிகவும் பயன்படுகிறது.
மேலும் இது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து உடலை பலப்படுத்துவது மட்டுமல்லாமல் ரத்த சோகை பிரச்சனை உள்ளவர்களுக்கு இது ஆரோக்கியத்தை கொடுக்கிறது.
செரிமானம் மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை நீக்குவது மட்டுமில்லாமல் சர்க்கரை நோயாளிகளுக்கு இது ஒரு மருந்தாகவே பயன்படுகிறது
குறிப்பாக சரும பிரச்சனைகளை சரி செய்யவும் எலும்புகளை வலுவாகவும் இது பயன்படுகின்றது.
எனவே எண்ணற்ற பலன் தரும் ராகி உணவில் சேர்த்து சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.