கொரோனா ஊரடங்கு தளர்வுகள் செய்யப்பட்ட பின் சினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகளை நடத்திக்கொள்ளலாம் என அரசு அறிவித்ததை தொடர்ந்து சினிமா வட்டாரம் சற்றும் உற்சாகம் அடைந்துள்ளது.
இந்நிலையில் போதைப்பொருள் தடுப்பு விவகாரத்தில் கன்னட நடிகை ராகினி திவேதியை போலிசார் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச்சென்றுள்ளனர்.
கர்நாடகாவில் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் பயன்பாடு அதிகரித்தை கட்டுப்படுத்த போலிசார் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.
இவ்விசயத்தில் சினிமா பட இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ் சினிமாவை சேர்ந்தவர்கள் சிலர் போதை பொருள் பயன்படுத்துவதாக குற்றம் சாட்டியதை தொடர்ந்து 15 பேரின் பெயர்களை போலிஸில் அவர் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் நடிகை ராகினியை ஆஜராகும்படி போலிசார் விசாரணைக்கு அழைத்து நோட்டீஸ் அனுப்பியிருந்தனராம்.