தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளியாக அறிமுகமாகி அதன் பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி 2 சீரியலில் காமெடி வில்லியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அர்ச்சனா.
இந்த சீரியல் மூலம் இவரது நடிப்புக்கு தனி ரசிகர் பட்டாளம் உருவானது. மேலும் சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் இருந்து வந்தார்.
இப்படியான நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திடீரென ராஜா ராணி 2 சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்து அந்த சீரியலில் இருந்து வெளியேறினார்.
மேலும் சமூக வலைதள பக்கங்களில் அவ்வப்போது லைட்டாக கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட தொடங்கினார். அந்த வகையில் நேற்று கிறிஸ்துமஸ் தினத்தில் வெள்ளை நிற உடையில் கவர்ச்சி தூக்கலாக காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இதோ பாருங்க
View this post on Instagram