Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கோச்சிங் கிளாசில் சரவணனை புகழ்ந்து பேசிய சந்தியா.. அதிர்ச்சியான பார்வதி.. இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்

Raja Rani 2 Serial Episode Update 07.04.22

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சந்தியாவை அழைத்துக்கொண்டு கிளாஸ்க்கு செல்கிறார் சரவணன். பிறகு சரி நீங்க கிளம்புங்க நான் வரேன் என சந்தியா சொல்ல இல்ல நான் காத்துக்கொண்டு உங்களைக் கூட்டிச் செல்கிறேன் என சரவணன் கூறுகிறார். எதுக்கு இதெல்லாம் எனக் கேட்க படிக்கும்போதே இதெல்லாம் பண்ணியிருக்கணும் அப்போ வாய்ப்பு அமையல என சொல்கிறார். சரியன சந்தியா காசிக்குச் சென்றுவிட்டார் சரவணன் அவருக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.

இந்த பக்கம் பார்வதி பாஸ்கரை சந்தித்து பேசுகிறார். பாஸ்கர் அமர் பார்ப்பதற்காக கிப்ட் கொடுத்து அசத்துகிறார். பிறகு நாளைக்கு கல்யாணம் விஷயம் தான் வீட்ல வந்து பேச சொல்கிறேன் இந்த விஷயத்தை என் ஃப்ரெண்டு விக்கி கிட்டே சொல்லணும் ரொம்ப சந்தோஷப்படுவான். சரி நான் கிளம்புகிறேன் என பாஸ்கர் கிளம்பிவிடுகிறார். விக்கி பேரைக் கேட்டதும் பார்வதி அதிர்ச்சி அடைகிறார். இதை எப்படி டீல் பண்ணுவது என யோசிக்கிறார்.

இந்த பக்கம் செந்தில் ரூமில் பேப்பர் படித்துக் கொண்டிருந்த அந்த நேரத்தில் சாமியார் குறித்த பேப்பர் கீழே விழ அதை அர்ச்சனா எடுத்துக்கொள்ள செந்தில் அதை பிடிங்கி பார்க்கிறார். இது கடைக்கு வந்த சாமியாருங்க தானே? இதை எதுக்கு நீ மறைக்கிற என்ன தப்பு பண்ற என கேட்க நான் என்ன தப்பு பண்ற அதெல்லாம் ஒன்னும் இல்லை என அர்ச்சனா வெளியே எழுந்து சென்று விடுகிறார்‌. அர்ச்சனா எதுவும் தப்பு பண்றா.. அதை சீக்கிரம் கண்டு பிடிக்கிறேன் என செந்தில் கூறுகிறார்.

அதன்பிறகு கிளாசில் ஒவ்வொருவரிடமும் எதற்காக இதை படிப்பைத் தேர்வு செய்கிறீர்கள் என கேட்க சந்தியா தன்னைப் பற்றியும் தன் அப்பா ஐபிஎஸ் ஆக வேண்டும் என சொல்லி சொல்லி வளர்த்ததை பற்றியும் வெடிகுண்டு விபத்தில் அவர்கள் இறந்து விட்டதை பற்றியும் பிறகு சரவணன் வீட்டாரையும் எதிர்த்து தன்னை படிக்க வைப்பது பற்றியும் கூறுகிறார். இப்படி ஒரு கணவர் கிடைக்க நீங்கள் கொடுத்துவைத்தவர் என ஆசிரியர் சரவணனை உள்ளே அழைத்து பாராட்டுகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 எபிசோட் முடிவடைகிறது.

Raja Rani 2 Serial Episode Update 07.04.22
Raja Rani 2 Serial Episode Update 07.04.22