Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சந்தியாவை திட்டிய சிவகாமி.சரவணன் செய்த வேலை. இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்

raja rani 2 serial episode update 09-02-23

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் சந்தியா ஊஞ்சலில் உட்கார்ந்து கேஸ் விஷயமாக யோசித்துக் கொண்டிருக்க அப்போது சரவணன் அங்கு வந்து என்னாச்சு என கேட்க சந்தியா கேஸ் விஷயமாக யோசித்துக் கொண்டிருப்பதாக சொல்ல அங்கு வரும் சிவகாமி சரவணன் போல சந்தியாவை திட்டுகிறார்.

வீட்ல ரெண்டு பொம்பளைங்க இல்ல சமைக்கிற வேலையை செய்யாமல் இப்படி உட்கார்ந்துட்டு இருந்தா எல்லாரும் எப்ப சாப்பிடுவது என திட்ட சந்தியா வேலைனால கொஞ்சம் மறந்துட்டேன் என சொல்லி தோசை சுட போக சிவகாமி அங்கேயும் போய் போன் பேசிட்டு இருக்கா, தோசை எல்லாம் தீய வச்சிட்டு இருக்காளா என தன்னுடைய கணவரிடம் சொல்லி திட்டுகிறார்.

அடுத்து சந்தியா ரூமில் இருக்கும் போது சரவணன் அங்கு வந்து அவருக்கு கவிதை சொல்லி சந்தியாவை கவர்கிறார். மறுபக்கம் கவிதா சரவணன் சந்தியாவை பழிவாங்க வேண்டும் என பரந்தாமனிடம் சொல்ல அவர் அதற்கு நாம ஸ்ட்ராங்காக வேண்டும் அப்பா விட்டுட்டு போன பிசினஸ் எல்லாத்தையும் மீண்டும் தொடர வேண்டும் அதிலும் முதலில் மது பிசினசை தொடங்க வேண்டும் என சொல்கிறார்.

மறுநாள் காலையில் சந்தியா ஆபீஸ் சென்று வீரமணி கேஸ் குறித்து விசாரித்துவிட்டு பிறகு தென்காசி குண்டுவெடிப்பு கேசை மீண்டும் கையில் எடுக்க முடிவு செய்கிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

raja rani 2 serial episode update 09-02-23
raja rani 2 serial episode update 09-02-23