Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சந்தியாவின் கனவால் வீட்டில் ஏற்பட்ட குழப்பம்.. சிவகாமி எடுக்கப்போகும் முடிவு என்ன? இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்

Raja Rani 2 Serial Episode Update 09.03.22

தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் சரவணன் அவருடைய அப்பாவும் மீண்டும் சந்தியாவின் கனவு பற்றி சிவகாமியுடன் பேச சிவகாமி இதைப் பற்றி என்னிடம் பேச வேண்டாம் என்று கூறிவிடுகிறார். நான் உயிரோடு இருக்கும் வரை இது நடக்காது என திட்டவட்டமாக கூறி விடுகிறார். எல்லோருக்கும் ஒரு கனவு இருப்பது போல அவங்களுக்கும் ஒரு கனவு இருக்கும்ல, அதுல என்ன தப்பு இருக்கு என சரவணன் கேட்க சிவகாமி பிடிவாதமாக இருக்கிறார். ‌ இதையெல்லாம் ஒட்டு கேட்ட அர்ச்சனா சிவகாமி சொல்வதை கேட்டு சந்தோஷப்படுகிறார்.

அதன் பிறகு வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் ஒன்றாக அமைதியாக இருக்க அங்கு வந்த சந்தியா சரவணனிடம் நீங்க கடைக்கு போகவில்லையா ஏன் எல்லாரும் அமைதியா இருக்கீங்க என்ன விஷயம் எனக் கேட்க யாரும் எதுவும் பதில் சொல்லாமல் அமைதியாக இருக்கின்றனர். பிறகு சரி வா மயிலு சாப்பாடு எடுத்து வைக்கலாம் என மயிலை கூப்பிட்டுக் கொண்டு செல்கிறார் சந்தியா. அதன் பிறகு எல்லோரும் சாப்பிட சென்றுவிட சிவகாமி சரவணன் மற்றும் அவருடைய அப்பா மட்டும் சோபாவில் அமர்ந்திருந்தனர்.

சரவணனின் சந்தியா சாப்பிட வாங்க என்று அழைக்க எனக்கு பசி இல்லை வேண்டாம் என்று சொல்லிவிட்டு கடைபிடிக்க வேண்டும் என்றார். ஏதாவது பிரச்சினையா மாமா என்ன கேட்டேன் அவர் நான் சாப்பிட போகிறேன் என எழுந்து சென்று விடுகிறார். சிவகாமியின் சாப்பிட கூப்பிட அவரும் எனக்கு பசியில்லை அப்புறம் சாப்பிடுகிறேன் என்று சொல்லிவிடுகிறார்.

ஒரு பக்கம் அர்ச்சனா சந்தியா மட்டும் போலீசாகி விட்டால் அவ்வளவு தான் நமக்கு அந்த வீட்டில் எந்த மரியாதையும் இருக்காது. இப்போதைக்கு நமக்கு இருக்க ஒரு ஆயுதத்தை மட்டும் தான் அவங்க இதற்கு ஒத்துக்கவே மாட்டாங்கன்னு நம்பிக்கை இருக்கு என அர்ச்சனா புலம்புகிறார். மேலும் சந்தியா செய்த ஒவ்வொரு விஷயத்திலும் போலீஸ் தன்மை ஒளிந்து கொண்டிருப்பதை அர்ச்சனா நினைத்துப் பார்க்கிறார்.

பிறகு சிவகாமி ஒரே இடத்தில் உட்கார்ந்து சிந்தனையில் இருக்கும் போது சந்தியா மேஜையை துடைத்துக் கொண்டு இருக்கிறார். சரவணன் சந்தியாவின் கனவை நிறைவேற்ற வேண்டும் என பிடிவாதமாக இருக்கிறார் நான் முடியாது என திட்டவட்டமாக சொன்னால் அவனுக்கு என் மேல வெறுப்பு வரலாம். எது நடக்கக்கூடாது என்று நினைக்கிறோமோ அது நடந்துவிடும். என்ன பண்ணலாம் என யோசித்து சந்தியாவிடம் பேசிவிட்டு தான் சரி உன்னுடைய கனவை அப்படியே புதைத்துவிடு குடும்பப் பெண்ணாக இரு அது தான் சரி என சந்தியாவிடம் பேசினார் அவர் புரிந்து கொள்வார் என்று சிவகாமி நினைக்கிறார்.

பிறகு சந்தியாவை அழைத்து கோவிலுக்கு போயிட்டு வரலாம் என கூப்பிட அர்ச்சனா ஓடிவந்து நானும் வருகிறேன் என சொல்கிறார். அதெல்லாம் வேண்டாம் என அர்ச்சனாவை வீட்டிலேயே இருக்கச் சொல்கிறார் சிவகாமி. சந்தியாவின் கோவிலுக்கு வரும் என சொல்லி கிளம்பி விட சிவகாமியின் கணவர் நீ எதையும் மனசுல வச்சிக்கிட்டு இப்படி பண்ற நீ எனக்கு புரியுது நல்ல முடிவா எடு என கூறுகிறார். நான் முடிவு பண்ணிட்டேன் என சிவகாமி சொல்கிறார். ‌அர்ச்சனா கோவிலுக்குச் சென்று இவர்கள் என்ன பேசுகிறார்கள் என தெரிந்து கொள்ள வேண்டும் என முடிவு செய்கிறார்.

இந்தப் பக்கம் சரவணன் சந்தியாவின் கனவு பற்றிய சிந்தனையில் இருக்க அப்போது கடைக்கு வந்த ஜோடி இனிப்பு பலகாரங்களை வாங்குகின்றனர். பின்னர் இந்த பெண்மணி மட்டும் அங்கிருந்து கிளம்ப என்ன அவங்க மட்டும் தனியா போறாங்க என சரவணன் கேட்கிறார். அவங்க ஸ்கூல்ல வேலை பண்ணுறாங்க. தினமும் வந்து போக முடியாது என்பதால் அங்கேயே ஹாஸ்டலில் தங்கி இருக்கிறார்கள். சனிக்கிழமை தான் வருவாங்க என கூறுகிறார்.

இப்படிப் பிரிந்து இருக்க கஷ்டமா இல்லையா எனக் கேட்க அவளுடைய கனவு அது. நாங்க காதலிச்சு திருமணம் பண்ணிக் கொண்டோம். அவளுடைய கணவர் நிறைவேற்றாமல் இருந்தால் நான் நல்ல புருஷன் கிடையாது. பாருங்க சின்ன குழந்தை மாதிரி சந்தோஷமா போறா. இந்த கனவை நான் நிறைவேற்றாமல் போய் இருந்தால் அதை அவள் மனதுக்குள் போட்டு மூடி மறைத்தாள். ‌ பிறகு அவர் சந்தோஷமாக இருப்பது போல இருந்தாலும் அது உண்மையான சந்தோஷம் இருக்காது என கூறுகிறார். இதனால் சரவணன் எப்படியாவது சந்தியா தன் கனவை நிறைவேற்ற வேண்டுமென முடிவு செய்கிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது. ‌

 Raja Rani 2 Serial Episode Update 09.03.22

Raja Rani 2 Serial Episode Update 09.03.22