தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் சந்தியா உள்ளிட்ட எல்லோருக்கும் பயிற்சி கொடுக்க புதியதாக வந்துள்ள கௌரி ஐபிஎஸ் இந்த இடத்துக்கு வந்திருக்க எல்லோரும் குடும்பம், பர்சனல் பிரச்சனை என எல்லாத்தையும் மறந்து விட வேண்டும். உங்களுடைய கவனம் முழுக்க முழுக்க பயிற்சி மட்டுமே இருக்க வேண்டும் அப்படி இருக்க முடியாது என உங்கள் மீது உங்களுக்கே சந்தேகம் இருந்தால் இப்பவே வெளியே சென்று விடலாம் அடுத்த பேச்சில் வந்து பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள் எனக் கூற அனைவரும் அப்படியே நிற்கின்றனர்.
கௌரி ஐபிஎஸ் இப்படி பேசியதை கேட்டு சிவகாமி என்ன இவங்க இப்படி எல்லாம் சொல்றாங்க அப்போ சந்தியா எல்லாரையும் மறந்து விடுவாளா என பதறி கொண்டு இருக்க அங்கு வரும் சந்தியா அவங்க அப்படித்தான் சொல்லுவாங்க அத பத்தி எல்லாம் நீங்க கவலைப்படாதீங்க என சொல்லிக் கொண்டிருக்க அப்போது மயிலு சரவணனுக்கு ஃபோன் போட்டு அர்ச்சனாவுக்கு குழந்தை பிறந்து இருக்கு என விஷயம் கூறுகிறார். இதைக் கேட்டு அனைவரும் சந்தோஷப்படுகின்றனர்.
இந்த பக்கம் மருத்துவமனையில் அர்ச்சனா தனக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதை பார்த்து கண்ணீர் விட்டு அழுகிறார். பக்கத்து பெட்டில் குழந்தை அழுவது சத்தம் கேட்டு அங்கு சென்று பார்க்க பக்கத்து வீட்டாரின் பெண்ணிற்கு ஆண் குழந்தை பிறந்து இருப்பதை பார்த்து அர்ச்சனா யாருக்கு என்ன குழந்தை பிறந்திருக்கிறது என்று இன்னும் யாருக்கும் தெரியாது இப்ப நாம என்ன வேணாலும் பண்ணலாம் என திட்டம் போட்டு குழந்தையை மாற்றி விடுகிறார்.
பிறகு நர்ஸ் வர இந்த பெண் இன்னும் நான் என் குழந்தையை பார்க்கவே இல்லை என சொல்லி கேட்க நான் உங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கு என குழந்தையை தூக்கிக் கொடுக்கிறார். அந்தப் பெண்ணும் குழந்தையை வாங்கி கொஞ்ச அர்ச்சனா சந்தேகம் வரல என சந்தோஷப்படுகிறார். பிறகு அர்ச்சனா உனக்கு என்ன குழந்தை பிறந்து இருக்கு என கேட்க ஆண் குழந்தை என கூறுகிறார்.
இந்த பக்கம் சந்தியா எனக்கு ரூம் கொடுத்துட்டாங்க என எல்லோரையும் ரூமுக்கு அழைத்துச் சென்று உட்கார வைத்துவிட்டு ஆபீஸில் ரிப்போர்ட் செய்ய கிளம்புகிறார். பிறகு சிவகாமி ஒரே போர் அடிக்குது வெளிய போய் சுத்தி பாக்கலாம் வாங்க என கணவருடன் வெளியே வர பக்கத்து ரூமில் ஒரு ஆண் இருப்பதை பார்த்து தன்னுடைய கணவரிடம் சொல்லி புலம்புகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
அதன் பிறகு வெளியான ப்ரோமோ வீடியோவில் குழந்தையை கொஞ்சம் செந்தில் என்ன குழந்தை என்னை மாதிரியும் இல்ல உன்னை மாதிரியும் இல்லை என கேட்க அர்ச்சனா அதிர்ச்சி அடைகிறார்.