தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் வீட்டில் எல்லோரும் காலையில் அம்மனுக்கு பேசிக்கொண்டிருக்க சந்தியாவிற்கு பார்வதி போன் செய்கிறார். போனை எடுத்த சந்தியா பார்வதியிடம் எப்படி இருக்க வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க என அடுக்கடுக்காக கேள்விகளை கேட்க ஒவ்வொன்னா கேளுங்க என சொல்லிவிட்டு எல்லோரும் நல்லா இருக்காங்க நானும் சந்தோஷமாக இருக்கிறேன் என கூறுகிறார். அதற்குள் பார்வதியின் அப்பா போனை வாங்கி பேசுகிறார். பிறகு மயிலு போனை புடுங்கி பார்வதியிடம் பேசுகிறார். அய்யாவை கூட்டிட்டு சீக்கிரம் வீட்டுக்கு வாங்க என சொல்கிறார். அதன் பிறகு பார்வதி அம்மாள் இல்லையா எனக் கேட்க பக்கத்தில் தான் இருக்காங்க என மயிலு சொல்ல பின்னர் சிவகாமி போனை வாங்கி பேசுகிறார். சிவகாமி வழக்கம்போல் அறிவுரைகளை அள்ளி விட பார்வதி நான் காலையிலேயே வேண்டாம் நான் உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கத்தான் ஃபோன் பண்ணு என்று சாம்பார் பருப்பு வேக வைக்கும்போது பொங்கி பொங்கி வந்துட்டே இருக்கு என்ன செய்வது என கேட்கிறார். பிறகு சிவகாமி பார்வதி சமைப்பதாக சொன்னதைக் கேட்டு மகிழ்ச்சி அடைகிறார். அதன் பின்னர் என்ன செய்வது எப்படி சமைப்பது என சொல்ல பார்வதி சரி என கேட்டுக்கொண்டு போனை வைத்து விடுகிறார்.
இந்தப் பக்கம் அர்ச்சனா விக்கியின் அப்பா செய்த சூழ்ச்சியில் பேராசைப்பட்டு சாம்பிளுக்கு துணிகளை எடுத்துக்கொண்டு விக்கி வீட்டிற்கு செல்கிறார். அங்கு அவர்கள் ஜூஸ் கொடுக்க அதை வாங்கி குடித்துக் கொண்டிருக்க விக்கியின் போட்டோவை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். பிறகு கருணாகரன் என் பையன் ஜெயிலுக்கு போக நீதான் காரணம். சும்மா இருந்தவனை சும்மா உசுப்பேற்றி அவனை இந்த நிலைமைக்கு கொண்டு வந்து விட்டு இருக்க, உன்னை நான் சும்மா விட மாட்டேன் கொல்லாமல் விடமாட்டேன் என மிரட்டுகிறார். மேலும் பளார் என கன்னத்தில் அறைகிறார். அர்ச்சனா காலில் விழுந்து என் வைத்து குழந்தைகள் அழுது என்னை விட்டுடுங்க நீங்க அடித்தால் நான் செத்துப் போய் விடுவேன் என கதறுகிறார். பிறகு உங்க வீட்ல இருக்கவங்க எல்லோரும் என் பையன் மேல கொடுத்த கேசை வாபஸ் வாங்கும் இல்லனா உன் கடை தீப்பிடித்து எரியும். வீட்டுக்காரன் மேல தண்ணி லாரி மோதி செத்து போவான். குடும்பத்துல கொள்ளி போட ஒருத்தரும் இருக்க மாட்டாங்க என மிரட்டுகிறார். பிறகு அர்ச்சனாவை அவர்கள் அனுப்பி வைத்து விடுகின்றனர்.
இந்த பக்கம் சிவகாமி சமைத்துக் கொண்டிருப்பேன் அப்போது சந்தியாவும் பேசிக்கொண்டு இருக்கின்றனர். அதன்பிறகு சிவகாமி சமையல் பற்றியும் அதனால் புருஷன் எந்த அளவிற்கு சந்தோஷப்படுவார் என்பது பற்றியும் சொல்லிக் கொடுக்கிறார். பிறகு சந்தியா ரூமுக்கு செல்ல அப்போது அர்ச்சனை வெளியில் உட்கார்ந்து கண்ணீர் விட்டு அழுது புலம்பிக் கொண்டிருப்பதைப் பார்த்து என்ன எது எனக் கேட்க அர்ச்சனா அதெல்லாம் ஒன்றுமில்லை நான் நல்லா இருக்கிறேன் என கூறுகிறார்.
இல்லையே பார்த்தால் அடி வாங்கன மாதிரி இருக்கு நல்லா அழுது இருக்க, என்னாச்சு ஏதாவது பிரச்சனையை இழுத்துட்டு வந்துட்டியா என கேட்க அதெல்லாம் ஒன்னும் இல்ல நீ கொஞ்சம் போறியா என திட்டிவிட்டு அர்ச்சனா அங்கிருந்து கிளம்பி விடுகிறார். ஆனால் சந்தியாவிற்கு அர்ச்சனை இப்போது இருப்பதைப் பார்த்து சந்தேகம் வந்துவிடுகிறது. இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
அதன் பிறகு வெளியான புரோமோ விடியோ வில் சந்தியா சரவணன் சந்தித்து அர்ச்சனா இப்படி இருப்பதை பற்றி பேசுகிறார். எனக்கு ஏதோ சந்தேகமாக இருக்கிறது நீங்க செந்திலிடம் பேசுங்கள் என கூறுகிறார்.