Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சிவகாமி எடுத்த முடிவு.. அதிர்ச்சியில் சரவணன் சந்தியா.. இன்றைய ராஜா ராணி 2 எபிசோடு

raja rani 2 serial episode update

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் சந்தியா, சரவணன் சிவகாமியின் காலில் விழுந்து எங்கள வெறுத்துடாதீங்க என கெஞ்சுகின்றனர். ஆனால் சிவகாமி பதில் ஏதும் பேசாமல் அமைதியாகவே இருக்க ரவி இருவரையும் எழுப்பி உன் மனசுல என்னதான் நெனச்சிட்டு இருக்க என சத்தம் போட்டு திட்டி கேட்க சந்தியா போலீஸ் ஆகட்டும் என சிவகாமி கூறுகிறார்.

ஆனா நீ எதையோ அப்படி வச்சு பேசுற மாதிரி இருக்கு என ரவி கேட்க உண்மையாகத்தான் சொல்கிறேன் சந்தியா போலீசுக்கு படிக்கட்டும் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. இந்த குடும்பத்துக்காக அவ நிறைய நல்ல விஷயங்களை பண்ணி இருக்கான் அது எல்லாம் நான் மறக்கவும் இல்லை மறுக்கவும் இல்லை. அவர் போலீசுக்கு படிக்கட்டும் ஆனா அதுக்கு சில கண்டிஷன் இருக்கு என்ன சொல்லி பூஜை அறையில் மூன்று விளக்குகளை ஏற்றி இது மூன்றும் அணையா விளக்கு சந்தியா ஒவ்வொரு தப்பா பண்ணும் போது ஒவ்வொரு விளக்கா அணைப்பேன். மூன்று விளக்கும் அணைந்து விட்டால் இவர் போலீஸ் ஆசையை கைவிட்டு விட வேண்டும் என சொல்ல சரவணன் உட்பட குடும்பத்தார் அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர்.

ஆனால் சந்தியா உங்களுடைய கட்டுப்பாடுகளை நான் ஏற்று நடக்கிறேன் இதில் ஒரு விளக்கு கூட அணியாமல் நான் நடந்து கொள்வேன் என வாக்கு கொடுக்கிறார். மேலும் சிவகாமி எனக்கு சந்தியாவோட பழையபடி பேச முடியும்னு தோணல நானா பேசுற வரைக்கும் என்கிட்ட அவர் பேசக்கூடாது என சொல்லிவிட்டு உள்ளே செல்கிறார்.

இந்த பக்கம் அர்ச்சனா கடைக்கு சென்று சென்ற இடம் இனி அத்தையிடம் கிளோஸ் ஆக முயற்சி செய்து சந்தியா பக்கம் சாயாமல் பார்த்துக் கொள்வேன் என சபதம் போட செந்தில் அவரை திட்டி அனுப்புகிறார். மறுபக்கம் சந்தியா சிவகாமி தன்னிடம் பேச வேண்டாம் என சொன்னதை நினைத்து சரவணன் இடம் அழுது புலம்பி கொண்டு இருக்க நீங்க எதுக்கு இந்த கண்டிஷனுக்கு ஒத்துக்கிட்டீங்க? அம்மாவை பேசி சம்மதிக்க வைத்திருக்கலாம் என சொல்ல அத்தையோட மனசு இடம் பிடிக்க வேண்டிய கட்டாயம் இருக்கு. நான் உங்க பேச்சைக் கேட்க மாட்டேன் என்று நினைத்துக்கொண்டு இருக்காங்க அதை மாத்தணும். போலீஸ் ஆகிறது விட அடுத்த மனசுல இடம் பிடிச்சு அவ எனக்கு மருமகள் இல்ல மகள் என சொல்ல வைக்கணும் என்ன சொல்ல சரவணன் கண்டிப்பா நீங்க அம்மாவோட மனசுல இடம் பிடிப்பீங்க அதோட இந்த சிவில் சர்வீஸ் பரீட்சையில் பாஸ் ஆகி பெரிய போலீஸ் ஆகணும் என கூறுகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 எபிசோட் முடிவடைகிறது.

raja rani 2 serial episode update
raja rani 2 serial episode update