Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சரவணனுக்கு காத்திருந்த ஷாக், அர்ச்சனா செய்த வேலை இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட்

raja rani 2 serial episode update 16-11-22

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் சந்தியாவிடம் ஜோதி சரவணன் தான் 23 வது இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்திற்கு மாற்றி வைக்குமாறு கூறியதாக நடந்த விஷயத்தை சொல்கிறார். அடுத்து செந்தில் கடையில் இருக்க அப்போது கடைக்கு வரும் பரந்தாமன் உனக்கு எதிராக உன் அண்ணன் சரவணன் நிற்கிறாராம் என விஷயத்தை சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார். ஆனால் அது செந்தில் நம்ப மறுக்க அர்ச்சனா நீங்க வளர்ந்திடக் கூடாது என பொறாமையில்தான் இப்படி பண்ணுறாங்க என சொல்ல பரந்தாமன் அர்ச்சனாவை உசுப்பேத்தி விடுகிறார்.

அடுத்து வீட்டில் பியூட்டி பார்லர் திறப்பது பற்றி பேசிக் கொண்டிருக்க வீட்டுக்கு வரும் சரவணன் சந்தியாவுக்கு உடல்நிலை சரியில்லாத விஷயம் பற்றி சொல்ல சிவகாமி பதறுகிறார். பிறகு ஒரு வழியாக சிவகாமியை சமாதானம் செய்த சரவணன் தேர்தல் குறித்து விஷயத்தை பியூட்டி பார்லர் திறப்பு முடிந்ததும் பேசிக் கொள்ளலாம் என முடிவெடுத்து அமைதியாக இருக்கிறார்.

அதன் பிறகு சரவணன் சந்தியாவுக்கு போன் செய்து அவரை ஊக்கப்படுத்தி பேசுகிறார். வழக்கம் போல் சந்தியா விடுகதை ஒன்றைக் கேட்டு சரவணன் மூளைக்கு வேலை கொடுக்கிறார். பின்னர் அர்ச்சனா ரூமில் இருக்க அப்போது தேர்தல் குறித்து ஆரம்பிக்க சரவணன் என்ன நிற்கட்டும் இப்ப என்ன நான் விலகிக்கிறேன் என சொல்ல உடனே அர்ச்சனா கண்கலங்கி நானும் என் புள்ளையும் அம்மா வீட்டுக்கு போயிடுறோம் என பிளாக்மெயில் செய்ய செந்தில் தேர்தலில் நிற்க ஒப்புக்கொள்கிறார். ஆனால் பியூட்டி பார்லர் பங்ஷன் முடிந்ததும் இது பற்றி பேசிக் கொள்ளலாம் என சொல்ல அர்ச்சனாவும் சரியென கூறுகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

அதன் பிறகு வெளியான ப்ரோமோ வீடியோவில் கடை திறப்பு விழாவின் போது ஒரு பக்கம் சரவணன் பேனர் போட்டு பிரச்சாரம் செய்து சில ஆட்கள் வர மறுப்பக்கம் செந்தில் பேனர் போட்டு பிரச்சாரம் செய்து சிலர் வருகின்றனர். இதனால் சிவகாமி அதிர்ச்சி அடைகிறார்.

raja rani 2 serial episode update 16-11-22
raja rani 2 serial episode update 16-11-22