தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் கோவலன் கண்ணகி நாடகத்தில் பாண்டிய மன்னனுக்கு சேர மன்னன் போர் தொடுத்து வர வீட்டுக்கு ஒருவர் போரில் பங்கேற்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட உடனே கிளம்புகிறேன் என கோவலன் சொல்ல அவருடைய மனைவியான போருக்கு நானும் வருகிறேன் என கிளம்புகிறார்.
போரில் பெண்கள் பங்கு பெறக்கூடாது என முதியவர்கள் சொல்ல அதனை எதிர்த்து கோவலன் பெண்கள் பங்கு பெறுவது தவறு இல்லை என கூறுகிறார். கடைசியில் கண்ணகி போரில் கலந்து கொண்டு பாண்டிய மன்னனை வெற்றி அடைய செய்கிறார். அதன் பின்னர் பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதை பாண்டிய நாட்டு மக்கள் புரிந்து கொள்கின்றனர்.
இதனை புரிந்து கொண்ட சிவகாமி இந்த நாடகத்தையே எனக்காகத் தான் போட்டு இருக்கே என தெரிந்து கொள்கிறார். பிறகு எல்லாம் சந்தியா சொல்லித்தான் இப்படியெல்லாம் நடக்கிறது என அவர் குத்திக்காட்டி மற்றவர்களிடம் பேசுகிறார். வீட்டுக்கு வந்த சரவணன் சிவகாமியிடம் நாடகம் எப்படி இருந்தது? உங்களுக்கு பிடித்து இருந்ததா என கேட்கிறார். சிவகாமி பிடித்திருந்ததை என சொல்ல சந்தியா உனக்காகவே நீங்க புரிந்து கொண்டு வந்த படிக்க சம்மதம் சொல்லுவீங்கனு தான் இவ்வளவு மெனக்கெட்டேன் என கூறுகிறார். சந்தியா படிப்பு பற்றி என்ன சொல்கிறீர்கள் என தொடர்ந்து சரவணன் கேட்க சிவகாமி அமைதியாகவே இருக்கிறார்.
ஒரு கட்டத்தில் சந்தியா போதும் நிறுத்துங்க திரும்பத் திரும்ப இதப்பத்தி அத்தைகிட்ட பேசாதீங்க நான் என்னுடைய போலீஸ் கனவு அடியோடு மறந்து விட்டேன் என கூறுகிறார். சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி மாற்றிக் கொண்டால் தான் வாழ முடியும் என நான் புரிந்து கொண்டேன். என்னுடைய ஆசைக்காக யாரையும் மதிக்காமல் இருக்க நான் சுயநல காரி இல்லை என கூறுகிறார். இனிமே இதப்பத்தி அத்தை கிட்ட மட்டுமில்லை யார் கிட்டயும் பேசாதீர்கள் என சந்தியா கூறுகிறார்.
இதைக் கேட்ட சிவகாமி மகிழ்ச்சி அடைகிறார். சரவணன் உண்மையாகத்தான் சொல்கிறீர்களா எனக் கேட்க எனக்குள் போலீசார் இருந்ததெல்லாம் ஒரு காலம் ஆனால் இப்போது இல்லை என சொல்கிறார். சத்தியம் பண்ணி சொல்லுங்க என சரவணன் கேட்க சந்தியா சத்தியத்தின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை என மறுத்து விட்டு உள்ளே சென்று விடுகிறார். அதன்பிறகு சிவகாமி அவளே வாழ்க்கையின் யதார்த்தத்தை புரிந்து கொண்டு மனத்தை மாற்றிக் கொண்ட பிறகு நீ எதுக்கு மல்லுக்கட்டிக்கிட்டு இருக்க? நீ போட்ட ராஜாவை சொல்லலாம் நாடகத்துக்கு தான் சரி நிஜத்துக்கு அதெல்லாம் ஒத்து வராது. எதார்த்தமான வாழ்க்கைக்கு வா என சொல்லி விட்டு உள்ளே சென்று விடுகிறார்.
பிறகு ரூமுக்குள் சந்தியா அழுது கொண்டிருக்க அங்கு போன சரவணன் உண்மையாகவே உங்க ஆசையை பிடி போட்டுடீங்களா என கேட்க ஆமாம் என கூறுகிறார். வீட்ல பிரச்சினை வரும் என்பதற்காக இப்படி முடிவு செய்து விட்டீர்களா? இப்போ உடனே வேண்டாம் ரெண்டு மாசம் போகட்டும் மீண்டும் உன் அம்மாவிடம் பேசுகிறேன் என சரவணன் செல்ல இதைப்பற்றி எப்பவுமே பேசாதீங்க என சந்தியா கூறுகிறார். உங்க கூட கடைக்கு வரேன் வரேன் டெலிவரிக்கு வரணும்னு வரை வீட்டில் எந்த வேலையா இருந்தாலும் சொல்லுங்கள் செய்கிறேன் ஆனால் இந்த போலீஸ் பத்தி திரும்பவும் பேச வேண்டாம் என கூறி விடுகிறார். இதனால் சரவணன் அதிர்ச்சி அடைய இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
