தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் ஓட்டப்பந்தயத்தில் முதலில் ஓடி வந்த நான்கு பேரை என் தலைவராக தேர்ந்தெடுத்து மற்றவர்களை அவர்களின் கீழ் பிரித்து வைக்கின்றனர்.
சந்தியாவை அக்பர் டீமுக்கு அனுப்ப அவர் சந்தியாவால் என்னுடைய டீமுக்கு பின்னடைவு ஏற்படும் என எதிர்ப்பு தெரிவிக்க கௌரி மேடம் கொஞ்ச நாள் இருக்கட்டும் அதன் பிறகு பார்க்கலாம் என சொல்லிவிடுகிறார். அடுத்ததாக கேண்டினில் சந்தியா சாப்பிட செல்லும்போது அக்பர் சந்தியாவிடம் சத்தம் போட்டு டென்ஷனாக பேசுகிறார். நான் உனக்கு ப்ராக்டிஸ் கொடுக்கிறேன். அதற்கு நீ முழு ஒத்துழைப்பு தர வேண்டும் ஒரு வேலை உன்னால் முடியவில்லை என்றால் நான் டீமில் இருந்து உன்னை நீக்க சொல்லி விடுவேன் என சொல்ல சந்தியா அழுது கொண்டு எழுந்து சென்று விடுகிறார்.
இந்த பக்கம் அர்ச்சனாவின் குழந்தையை பார்க்க பார்வதி பாஸ்கர் வந்திருக்கு அந்த சமயம் சரியாக சிவகாமி சரவணன் மற்றும் அவருடைய அப்பா மூவரும் சென்னையில் இருந்து வந்து விடுகின்றனர். குழந்தையை கொண்டு வரச் சொல்ல அர்ச்சனா தயக்கத்துடன் தூக்கி வர செந்தில் குழந்தையை வாங்கி வந்து சிவகாமி கையில் கொடுக்க அவர் குழந்தையை வாங்கி கொஞ்ச பிறகு பார்வதி குழந்தையை வாங்கி கொஞ்சும் போது என்ன குழந்தை கலர் ரொம்ப கம்மியா இருக்கு என்ன சொல்ல அர்ச்சனா அதிர்ச்சடைகிறாள். கலர் எப்படி இருந்தா என்ன அது நம்ம வீட்டு குழந்தை என சிவகாமி சொல்ல நான் அண்ணாவும் இந்த அளவுக்கு கலர் இல்லை அண்ணி இந்த அளவுக்கு கலர் கம்மி இல்லை அதனால் கேட்டேன் என சொல்கிறார்.
பிறகு ரவி அடுத்து ஜெசிக்கு பெண் குழந்தை தான் பிறக்கணும் பெண் குழந்தை தான் வீட்டுக்கு சந்தோஷத்தை தரும் என சொல்ல சிவகாமியும் அதுதான் சரியென சொல்ல அர்ச்சனா அதிர்ச்சி அடைகிறார். அப்போ பெண் குழந்தையா இருந்தா உங்களுக்கு யாருக்கும் எந்த பிரச்சினையும் இல்லையா என அர்ச்சனா யோசிக்கிறார்.
அடுத்து இந்த பக்கம் சந்தியாவிற்கு வேலியில் புகுந்து வெளியே வரும் போட்டி நடக்க எல்லோரும் அதை சரியாக செய்ய சந்தியா தட்டு தடுமாறுகிறார். வெளியில் வரும் கடைசி நொடியில் அவருடைய தலை முடி கம்பியில் மாட்டிக்கொள்கிறது. இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.