தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் ஆதி அப்பாவோட வீட்டுக்கு வருவதை வரவேற்க ஜெசி கார் வருவதை கார்த்தி வீட்டுக்குள் ஓடி வந்து ஒளிகிறான். ஆதியின் நடவடிக்கையை பார்த்தேன் சந்தியா சந்தேகப்பட பிறகு ஜெசி வந்திருப்பதை பார்த்து வெளியே சென்று வரவேற்க இருவரும் மாறி மாறி நீ எப்படி இங்க என கேட்டுக்கொள்கின்றனர். அதன் பிறகு சந்தியா ஜெஸ்ஸி அழைத்துக் கொண்டு அர்ச்சனா ரூமில் விடுகிறார்.
அடுத்ததாக அர்ச்சனாவுக்கு மேக்கப் போட்டு வெளியே அழைத்து வரும்போது ஆதியை பார்க்க ஆதி அதிர்ச்சி அடைகிறான். அடுத்ததாக அர்ச்சனாவுக்கு சீமந்தம் செய்யும் விழா சிறப்பாக நடக்க சந்தியா ஜெஸ்ஸியை கூப்பிட்டு நலங்கு வைக்க சொல்கிறார். இந்த நேரத்தில் தண்ணீர் தூக்கி வரும் ஆதி தவறி கீழே விழ பதறிப் போன ஜெஸி ஓடிப் போய் ஆதியை கைப்பிடித்து தூக்க வாங்கிட்டு வந்த சிவகாமி மேக்கப் போட வந்த மா காசு வாங்கணுமான்னு இரு, எங்களுக்கு இல்லாத துடிப்பு உனக்கு எதுக்கு என திட்டுகிறார்.
இதனால் வருத்தத்தோடு அங்கிருந்து நகர்ந்து வரும் ஜெஸ்ஸி திடீரென மயங்கி விழ அது உட்பட அனைவரும் அதிர்ச்சடைகின்றனர். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.