Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மிரட்டிய கருணாகரன் சவால் விட்ட சந்தியா விடுதலையானாரா சரவணன்.? – ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் அப்டேட்.!

Raja Rani 2 Serial Episode Update 25.03.22

தமிழ் சின்னத்திரையின் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் சரவணன் போலீஸ் ஸ்டேஷனில் இருக்க என்ன செய்வது என தெரியாமல் குடும்பத்தார் கலங்கி கொண்டிருக்கின்றனர். நேரடியாக கருணாகரனை பார்த்து பேசலாம் என செந்தில் சொல்லிக் கொண்டிருக்கும் நேரத்தில் அதெல்லாம் முடியாது என அவரது அப்பா கூறுகிறார். இந்த நேரத்தில் வீட்டுக்கு வந்த கருணாகரன் என்னிடம் பகைத்துக் கொண்டதால் வந்த பிரச்சனை தான் இது.

பாறை மேல் மோதி மோதி அதை உடைத்து விடலாம் கொம்பு வச்ச மாடு முயற்சி பண்ணி கடைசியில உடையறது என்பது இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும் என சொல்ல சிவகாமி அவரது காலில் விழுந்து விடுகிறார். ஆனால் நான் மன்னிக்க பெரிய மனுஷன் எல்லாம் அடிச்சா திருப்பி அடிப்பேன், அந்த போதைப்பொருள் கேஸ்ல பத்து வருஷத்துக்கு உள்ளே தான் கிடக்கணும் என சொல்கிறார். பிறகு சந்தியா என் புருஷனை சட்டப்படி வெளியே கொண்டு வரேன் என சவால் விடுகிறார்.

இதனையடுத்து மறுநாள் மார்க்கெட்டில் உள்ள அனைவரையும் அழைத்துச் சென்று போலீஸ் ஸ்டேஷனில் வந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுகிறார். இருக்க இருக்க கூட்டம் கூடிக் கொண்டே சென்றதால் அந்த போலீஸ் கருணாகரனுக்கு போன் செய்து என்ன செய்வது என கேட்க இரண்டு போலீசை உள்ள விட்டு அடி ஓடி போய்டு வாங்க என சொல்கிறார். ஆனால் அப்படி பண்ணினால் பெரிய பிரச்சனையாகி விடும் என சொல்ல இப்போதைக்கு நான் அவனை விட்டு விடலாம் வேறு வழியில் பார்த்துக்கொள்ளலாம் என கூறுகிறார்.

கருணாகரன் சரி இப்போதைக்கு நீ சொல்றது தான் கரெக்ட் என சொல்லி சரவணனை வெளியே விட சொல்கிறார். பிறகு போலீஸார் வந்து ரிலீஸ் செய்ய அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்று தலையில் தண்ணீர் ஊற்றி பிறகு சாப்பாடு கொடுத்து சுடுதண்ணியில் உடம்புக்கு ஒத்தடம் கொடுக்கின்றனர்.

மறுநாள் காலையில் தங்களுடைய கனவை புரிந்து கொண்டு அதை நிறைவேற்றும் கணவன்மார்கள் கிடைப்பது மிகவும் அரிது சரவணன் என்னுடைய ஆசையை நிறைவேற்ற நினைக்கிறார். அவருக்காக நான் போலீசாக வேண்டும் என முடிவு செய்து அதற்கான அப்ளிகேஷன் பில் செய்து சரவணனிடம் கொடுக்க இதனை பார்த்த சரவணன் மகிழ்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Raja Rani 2 Serial Episode Update 25.03.22
Raja Rani 2 Serial Episode Update 25.03.22