தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியல் இன்றைய எபிசோட்டில் சந்தியாவுக்கு குழந்தை பிறக்கக் கூடாது என்பதற்காக சாமியாரை பார்க்க செல்கிறார் அர்ச்சனா. அங்கு சாமியாரை பார்க்க எனக்கு தெரிந்தவரை ஒருத்தவங்க இப்போதைக்கு குழந்தை வேண்டாம் தள்ளிப் போட நினைக்கிறார்கள் அவங்களுக்கு மருந்து வேண்டும் என கேட்கிறார் அர்ச்சனா.
மருந்து எல்லாம் இருக்கிறது ஆனால் நீ கேட்பது பெரிய விஷயம் என்பதால் அதிக செலவாகும் என கூறுகின்றனர். சந்தியாவிற்கு குழந்தை பிறக்கக்கூடாது அதுதான் வேண்டும் என அர்ச்சனா கையில் இருக்கும் தங்க வளையலை கழட்டி கொடுக்கிறார். ஒரு மருந்தை எடுத்து அர்ச்சனாவிடம் கொடுக்கின்றனர்.
வீட்டுக்கு வந்த அர்ச்சனா சரவணன் சந்தியாவிற்கு மயிலு பால் கலக்கிக் கொண்டிருக்க அப்போது அங்கு வந்த அர்ச்சனா பின்புறத்தில் துணி இருக்கிறது அதை எடுத்து வா என மயிலை அனுப்பி இந்த மருந்தை கலக்கி விடுகிறார். பிறகு மயிலே பின்னாடி எந்த துணியும் இல்லை என மயிலு சொன்னபோது செந்தில் எடுத்துட்டு இருப்பாரு, இந்தா இந்த பாலைக் கொண்டு போய் நீ கொடு என மயிலிடம் கொடுக்கிறார்.
மயிலு பால் எடுத்துக் கொண்டு செல்லும் போது எதிரே வந்த அர்ச்சனாவின் மாமனார் பாலை வாங்கி முழுவதும் குடித்து விடுகிறார். மருந்து மொத்தமும் தீர்ந்து போச்சு நம்ம போட்ட திட்டத்தை எல்லாம் இப்படி இந்த மாமா கெடுத்துட்டாரு என புலம்புகிறார். பிறகு மறுநாள் காலையில் எல்லோரும் கோயிலுக்கு கெளம்பு கொண்டிருக்க சிவகாமி நீங்க போய் எதையும் பேசாமல் ஓரமா உட்காருங்க என சொல்ல இவரும் வந்து சோபாவில் உட்கார்ந்து விடுகிறார்.
மாமாவுக்கு என்ன ஆச்சுன்னு தெரியலையே என அர்ச்சனா வந்து பார்க்க அவர் சோபாவில் அமைதியாக அமர்ந்து கொண்டு இருப்பதை பார்த்து மாமா என்னாச்சு என கேட்க சிவகாமி பேசக்கூடாது என சொன்னதால் வாய் பேசாமல் அமைதியாக இருக்கிறார். ஒரு வேளை மருந்து சாப்பிட்டதால் வாய் பேச முடியாமல் போய்விட்டது என அர்ச்சனா நினைத்துக் கொண்டிருக்கிறார். அப்போது சந்தியா காபி எடுத்து வந்து கொடுக்க அதை வாங்கிக் கொள்கிறார். அர்ச்சனா உனக்கு சத்து மாவு கலக்கி வைத்து இருக்கேன் என்று சொல்ல உடனே அவருடைய மாமனார் எனக்கும் கொஞ்சம் எடுத்துட்டு வா மா.. போற இடத்துல எவ்வளவு நேரம் ஆகுமோ தெரியாது கொஞ்சம் சாப்பிட்டால் பசி தாங்கிப்பேன் என கூறுகிறார். மேலும் நேத்து குடிச்ச பாலு ரொம்ப தெம்பா இருக்கு என்று சொல்ல அர்ச்சனா அதிர்ச்சி அடைகிறார்.
போலி சாமியார் போல மனதை மாற்றி கொடுத்துட்டாங்க மாமா தெம்பா இருக்குன்னு சொல்றாங்க, இதை சந்தியா குடித்திருந்தாலும் நல்ல தெம்பா தான் இருந்திருப்பா என்னை சிவகாமியுடன் கடையில் ஸ்டாக் வந்திருக்கு இறக்கி வைத்து விட்டு வந்து விடுகிறேன் என்று பொய் சொல்லிவிட்டு சாமியாரை பார்க்க சொல்கிறார். அங்கு போய் சாமியாரிடம் என்னை ஏமாத்திட்டீங்க போலி மருந்து கொடுத்து வாங்க அதை சாப்பிட்டு தெம்பா இருக்குனு சொல்றாங்க அர்ச்சனா சத்தம் போட சாமியார் நடந்தது என்ன முழுதாக சொல்லு என கூறுகிறார்.
உடனே அந்த மருந்த அந்த பொண்ணோட மாமனார் மாத்தி குடிச்சிட்டாரு, அவரு தெம்பா இருக்குனு சொல்றாரு. இப்படி என்ன ஏமாத்திட்டாங்களே என சொல்ல அந்த மருந்து பொம்பளைங்களுக்கு தான் வேலை செய்யும் ஆம்பளைங்களுக்கு வேலை செய்யும்னு சொன்னோமோ என கேட்க உடனே அர்ச்சனா அட ஆமாம் அது என்னோட தப்பு தான் மன்னிச்சிடுங்க சாமி என மன்னிப்பு கேட்டு விட்டு அங்கிருந்து கிளம்பி விடுகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
