தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சந்தியா சரவணன் கையில் போலீஸ் ஆவதற்கான விண்ணப்பத்தைக் கொடுத்து உங்களுக்காக நான் போலீஸ் ஆகிறேன் என கூறுகிறார். நிச்சயம் உங்களது ஆசையை நிறைவேற்றுவேன் என சந்தியா வாக்குக் கொடுக்க சரவணன் உற்சாகம் அடைகிறார். கருணாகரன் என் மீது பொய் வழக்குப் போட்டு ஜெயிலில் போட்டது இது ஒரு விதத்தில் நல்லதுதான் என சரவணன் சொல்ல அப்படியெல்லாம் சொல்லாதீங்க உங்களை அந்த இடத்தில் பார்க்க எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது எனக் கூறுகிறார்.
பிறகு சரவணன் எந்த நேரத்திலும் உங்களுடைய கனவில் இருந்து பின்வாங்க மாட்டீங்க தானே என கேட்க இல்லை நிச்சயமாக போலிஸாகி உங்களுடைய ஆசையை நிறைவேற்றுவேன் என சொல்கிறார். பிறகு சரவணன் சந்தியாவை ஊக்கப்படுத்தி அவர் உணர்ந்து படிக்க மேசையை தயார் செய்து உட்காரவைத்து படிங்க என புத்தகம் எடுத்து கொடுக்கிறார். ஒரு மேஜையை ரெடி செய்து கொடுத்து இவ்வளவு சந்தோஷப்படுகிறார். இவர் ஆசைப்படி நான் போலீஸ் அண்ணா இன்னும் எவ்வளவு சந்தோஷப்படுவார் என சந்தியா மனதுக்குள் இணைகிறார்.
பிறகு சந்தியா சரவணன் செய்த உதவியை நினைத்து கண் கலங்குகிறார். பிறகு சரவணன் அவரை சமாதானம் செய்கிறார். மறுநாள் காலையில் சந்தியா வீட்டு வேலை செய்து கொண்டிருக்க எல்லோரும் அமர்ந்து கொண்டு இருக்கின்றனர். அந்த நேரத்தில் சிவகாமி கையில் ஒரு பெரிய அட்டைப் பெட்டியை தூக்கிக் கொண்டு வீட்டிற்குள் நுழைகிறார்.
பிறகு அதை பிரித்து உள்ளே இருந்து தையல் மிஷினை எடுக்கிறார். சந்தியாவுக்கு தான்.. படிச்ச பொண்ணு, வீட்டு வேலையோ பெருசா தெரியல அதான் இதையாவது கத்துக்கிட்டோம் என வாங்கி வந்தேன் என சொல்ல சந்தியாவின் முகம் சுருங்குகிறது. பிறகு சந்தியாவை அழைத்துக்கொண்டு ரூமிற்குள் சென்று டேபிள் மேலிருந்த புத்தகங்களை தேவையில்லாத இதெல்லாம் எதுக்கு இங்கே இருக்கு என தூக்கி போட்டுவிட்டு மிஷினை வைத்து அவரை உட்கார வைக்கிறார்.
அதன் பின்னர் அர்ச்சனா சூப்பரா இருக்கு என சொல்லிவிட்டு சந்தியாவை மக்கள் அடிப்பது போல ஓடிச்சென்று ஒரு புடவையை எடுத்து வந்து இதுதான் என் குழந்தைக்கு முதன் முதலாக டிரஸ் போடணும் அதுவும் பெரியம்மா கையால் தச்சு போடனும் என சந்தியாவிடம் கொடுக்கிறார். பார்வதி சந்தியாவின் முகத்தை பார்த்துவிட்டு இன்னைக்கு இதில் விருப்பமில்லை எதுக்கு கட்டாயப்படுத்தறீங்க என கூறுகிறார். சரவணன் போலீசுக்கு படிக்கையில் சொல்லும்போது எனக்கு விருப்பமில்லை என நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல சொன்னா, இப்போ எதுவுமே சொல்லல அவளுக்கு இதில் விருப்பம் இருக்கு என கூற சந்தியா நான் கத்துகிறேன் என கூறுகிறார். பிறகு எல்லோரும் வெளியே சென்றதும் சந்தியா கண்ணீர் விட்டு அழுகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.