தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோட்டில் செல்வன் சரவணனை துப்பாக்கி முனையில் மிரட்டி இந்த நேரத்தில் குடும்பத்தார் எல்லோரும் வந்து விட உங்க அம்மா உங்க அப்பாவ சுடவா இல்ல சந்தியாவை சுடவா என ஓர் முன்னாடியும் துப்பாக்கியை வைத்து மிரட்டுகிறார். பிறகு செல்வம் அங்கிருந்து ஓட சரவணன் அவரை துரத்த துப்பாக்கி சத்தம் கேட்டு குடும்பத்தார் அனைவரும் பதற ஆனால் செல்வத்தை போலீசார் சுற்றி வளைத்து வெளியே அழைத்து வருகின்றனர்.
அதன்பிறகு செல்வம் உனக்கு அந்த ஸ்வீட்ல தான் ஆப்பு இருக்கு என சொல்லிவிட்டு செல்கிறார். இந்த பக்கம் பார்வதியைத் தேடி அலையும் பாஸ்கர் அவரைக் கண்டதும் கட்டியணைத்து அன்பை வெளிப்படுத்துகிறார். பிறகு குடும்பத்தார் எல்லோரும் ஓடி வந்து பார்வதியை பிடித்து ஆறுதல் கூறுகின்றனர்.
பின்னர் பார்வதியிடம் அவருடைய குடும்பத்தார் எப்படி இந்த தீவிரவாதிகளிடம் சிக்கின என கேட்க நடந்த விஷயங்களைக் கூறுகிறார். பின்னர் சந்தியா அண்ணி தான் கடவுள். அவங்கதான் ரிஸ்க் எடுத்து என்னை காப்பாற்றுங்கள் என பார்வதி சொல்ல பாஸ்கர் அவருக்கு நன்றி கூறுகிறார். அதன்பிறகு சிவகாமி நீ எங்க வீட்டுக்கு வந்த தெய்வம் என கையெடுத்து கும்பிடுகிறார்.
இப்படி எல்லோரும் பேசிவிட்டு சாமி கும்பிட உள்ளே செல்கின்றனர். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
அதன் பிறகு வெளியான ப்ரோமோ வீடியோவில் சரவணன் சர்க்கரை உடம்பில் இருந்த வெடிகுண்டு கோட்டை தூக்கிக் கொண்டு ஓடுகிறார். ஊரின் ஒதுக்குப்புறமான இடத்தில் தூக்கி வீச அது வெடித்து சிதறுகிறது. சரவணனுக்கு என்ன ஆச்சு என தெரியாமல் சந்தியா இந்தப்பக்கம் பதறுகிறார்.