தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் இன்றைய எபிசோடு கரண்ட் கட் ஆனதால் எல்லோரும் ஹாலிவுட் பேச அப்போது சரவணன் நல்ல வேளை சந்தியாவுக்கு எக்ஸாம் முடிஞ்சிடுச்சு என சொல்ல பாட்டி சந்தியா வேலைக்கு போவதை பற்றி திரும்பவும் எதிர்த்து பேசுகிறார். அதன் பிறகு சரவணன் எக்ஸாம் ஹாலில் நடந்த விஷயம் குறித்து சொல்கிறார்.
பின்னர் அர்ச்சனா அத்தை உங்ககிட்ட ஒன்னு கேட்கணும் என சொல்லி மேக்கப் போட நான் ஒருத்தங்க வர வைக்க போறேன் என கூறுகிறார். செந்தில் அதெல்லாம் வேண்டாம் என சொல்ல சிவகாமி சரி அவ ஆசைப்பட்டா பண்ணிக்கட்டும் என கூறுகிறார். பிறகு அர்ச்சனா ஜெஸ்ஸிக்கு ஃபோன் செய்து மேக்கப் போட வீட்டுக்கு வர சொல்கிறார். வந்து அத்தையோட பழகி நல்ல பேர் எடுத்துட்டான் நாளைக்கு நீ தான் ஆதிய கல்யாணம் பண்ணிக்க போறேன்னு தெரிஞ்சா சீக்கிரம் ஓகே சொல்லிடு வாங்க என சொல்கிறார். ஜெஸ்ஸி சரியென கூறுகிறார்.
பிறகு மறுநாள் சந்தியாவும் சிவகாமியும் அடைக்குச் சென்று வர அந்த வழியில் ஜெசி மயங்கி விட அவரை தண்ணீர் கொடுத்து எழுப்பி வீட்டுக்கு அனுப்பி வைக்கின்றனர். பிறகு ஆதியிடம் நாளைக்கு பங்க்ஷன்ல உனக்கு ஒரு சர்ப்ரைஸ் காத்துட்டு இருக்கு என கூறுகிறார். இதனால் ஆதி என்னன்னு என்ன தெரியாமல் தவிக்கிறார்.
மறுநாள் காலையில் எல்லா ஏற்பாடுகளும் தயாராக இருக்க ஜெஸ்ஸி வீட்டுக்கு வர அதை பார்த்து ஆதி பயந்து ஒளிகிறான். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.