தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. ரூமில் அமர்ந்து சிவகாமி ஆதி செய்த விஷயத்தை நினைத்து அழுது புலம்பி கொண்டிருக்க அப்போது வந்த ரவி சிவகாமியிடம் ஆதி விஷயத்தில் என்ன முடிவு எடுத்திருக்க என கேட்கிறார்.
என்ன முடிவு எடுக்கிறது? நான் ஏற்கனவே சொன்னதுதான் இந்த அம்மா தான் இந்த விஷயத்தில் முடிவெடுக்க வேண்டும் என சிவகாமி சொல்ல அவங்க எனக்கு அம்மா ஆதிக்கு நீ தான் அம்மா இந்த விஷயத்தில் நீ தான் முடிவு எடுக்க வேண்டும் அம்மாவை நான் பார்த்துக்கிறேன் என சொல்ல சிவகாமி ஏற்கனவே அவங்க என் மேல கோவமா இருக்காங்க இதுல நான் எதுவும் பண்ண முடியாது என கூறி விடுகிறார். பிறகு ரவி அவருடைய அம்மாவிடம் இது பற்றி பேச நான் என்ன முடிவு எடுக்கிறது நான் சொன்னா மட்டும் அத நீங்க கேட்கவா போறீங்க ஏதாவது பண்ணுங்க காலையில ஊருக்கு கிளம்புறேன் என கூறுகிறார்.
அடுத்ததாக சரவணன் மற்றும் சந்தியா என இருவரும் வீட்டுக்கு தெரியாமல் ஜெஸ்ஸி வீட்டிற்கு சென்று மன்னிப்பு கேட்க கிளம்புகின்றனர். இந்த பக்கம் அவரது வீட்டில் ஜெஸ்ஸியின் அப்பா அம்மா ஆதி பற்றி திட்டி பேசிக்கொண்டிருக்கின்றனர். அட்லீஸ்ட் ஒன்னு எல்லோருக்கும் தெரிந்த பிறகு ஆதி இவளிடம் நேர்லயோ இல்ல போன்லையோ பேசி இருக்கணும் என ஜெசியின் அப்பா சத்தம் போட அந்த நேரத்தில் ஆதி வீட்டுக்கு வந்து எல்லோரிடமும் மன்னிப்பு கேட்கிறான்.
அதோட வீட்ல விஷயம் தெரிந்ததும் எல்லோரும் என்னை கண்டபடி திட்டுனாங்க தலை குனிந்து நிற்கிறது தவிர எனக்கு வேற வழி இல்ல. முதல்ல கல்யாணத்துக்கு சம்மதிக்கல பிறகு சம்மதம் சொல்லிட்டாங்க ஆனா ஒரு கண்டிஷன் போடறாங்க என கூறுகிறார். என்னது என்ன ஜெஸ்ஸியின் அம்மா கேட்க மத அடையாளங்கள் அனைத்தையும் இங்கேயே விட்டுட்டு வரணும்னு சொல்றாங்க என சொல்ல ஜெஸ்ஸியின் அப்பா அம்மா அதிர்ச்சடைந்து ஆதியை திட்டுகின்றனர். இது எந்த விதத்தில் நியாயம் என கேட்கின்றனர். அவங்க தான் அப்படி சொல்றாங்கன்னா எனக்கு எங்க போச்சு புத்தி என திட்ட ஆதி அங்கிருந்து கிளம்புகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
