raja rani 2 serial episode update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் சரவணன் மற்றும் சந்தியா இருவரும் ஹாஸ்பிடலுக்கு சென்று சென்னைக்கு அபார்ட் செய்ய அவரது பெற்றோர் முயற்சி செய்வதாக தவறாக நினைத்து சத்தம் போட இறுதியில் அவர்கள் குழந்தையின் ஆரோக்கியத்தை ஆய்வு செய்யவே அழைத்து வந்திருப்பது தெரிய வருகிறது.
அதன் பிறகு அவர்கள் கூடிய சீக்கிரம் ஜெசிக்கும் ஆதிக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிறோம் என வாக்கு கொடுத்துவிட்டு கிளம்புகின்றனர். இந்தப் பக்கம் செந்தில் ஆதி செய்த தவறை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருக்க அந்த நேரத்தில் வந்த அர்ச்சனா கல்யாணம் நடக்கவே நடக்காது என்பது போல பேசுகிறார். யாரை வேணாலும் சம்மதிக்க வைக்கலாம் ஆனால் உங்க பாட்டிய சம்மதிக்க வைக்க முடியாது அதுக்கு வாய்ப்பே இல்லை என அர்ச்சனா சொல்ல செந்தில் கோபப்படுகிறான். சந்தியா அண்ணி கண்டிப்பா இந்த கல்யாணத்தை நடத்தி வைப்பாங்க என கூறுகிறான்.
அடுத்ததாக எல்லோரும் வீட்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென சக்கரை ஓடி வந்து ஐயாவுக்கு ஆக்சிடென்ட் ஆகிடுச்சு என சொல்ல அந்த அதிர்ச்சியில் சிவகாமி அழுது மயங்கி விழுகிறார். பிறகு எல்லோரும் ஹாஸ்பிடலுக்கு ஓட சிறிய விபத்து தான் ஆனால் ரத்தம் நிறைய போய் இருக்கு அவருக்கு ஏபி நெகட்டிவ் ரத்தம் தேவைப்படுகிறது என சொல்கின்றனர். இந்த ரத்தம் கிடைப்பது அரிது, நீங்கள் தான் ஏதாவது ஏற்பாடு செய்ய வேண்டும் என டாக்டர்கள் கைவிரித்து விடுகின்றனர்.
இதனால் குடும்பத்தினர் என்ன செய்வது என தெரியாமல் குழம்ப சரவணன் வெளியில் சென்று விசாரித்து வருகிறேன் என கிளம்புகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
அதன் பிறகு வெளியான ப்ரோமோ வீடியோவில் ஆதி ஜெசிக்கு போன் செய்து அப்பாவுக்கு ஆக்சிடென்ட் ஆன விஷயம் சொல்லி ஏ பி நெகடிவ் ரத்தம் தேவைப்படுகிறது என சொல்கிறான். இதனால் ஜெசி ரவிக்கு ரத்தம் கொடுத்து உதவலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. என்ன நடக்கிறது என்பதை அடுத்த எபிசோடில் பார்க்கலாம்.
இடுப்பைக்காட்டி விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் காவியா அறிவுமணி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா…
நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
கருப்பு நிற உடையில் மாளவிகா மோகனன் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா, இயக்கத்திலும்,அ.அன்பு ராஜா,…
ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர்…