தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் ஐஏஎஸ் பரீட்சையில் பாஸான சந்தியா பயிற்சிக்கு சென்னை போக வேண்டும் என சொல்ல சிவகாமி அதெல்லாம் முடியாது நான் சென்னைக்கு போகும் போது என்ன சொல்லி அனுப்பினேன் இதுதான் சென்னைக்கு போவது கடைசியா இருக்கணும் என்று தானே சொன்னேன். ஆனால் இப்போ நீங்க மாத்தி மாத்தி பேசுறீங்க நான் என்னுடைய முடிவுல உறுதியா இருக்கேன் என சொல்ல சந்தியா கண்கலங்கி அழுகிறார்.
அர்ச்சனா ஒரு பக்கம் சந்தோஷத்தில் திளைக்க சரவணன் மற்றும் குடும்பத்தார் சிவகாமியிடம் சந்தியாவுக்காக பேச முயற்சிக்கின்றனர். ஆனாலும் செவி சாய்க்காத சிவகாமி கடைசியில் சந்தியாவுக்கு ஒரு டெஸ்ட் வைக்கிறார். முதலில் வீட்டில் காணாமல் போன 5 லட்சத்தை யார் எடுத்தது என கண்டுபிடிக்கட்டும் என சொல்ல அர்ச்சனா வச்சாங்க பாரு செக் என மீண்டும் சந்தோஷம் அடைய ஆதி அதிர்ச்சியடைகிறான்.
எல்லோரும் இந்த நேரத்தில் இது எப்படி முடியும் என பேச சந்தியா இதை நான் செய்கிறேன் என ஒப்புக்கொள்கிறார். பிறகு சந்தியா தனியாக என்ன செய்வது என யோசித்துக் கொண்டிருக்க சரவணன் அங்கு வந்து எதுக்கு நீங்க ஒத்துக்கிட்டிங்க என கேட்க இல்ல இது எனக்கு ஒரு பயிற்சி மாதிரி இதனை கண்டிப்பாக செய்யணும். ஒருவேளை அந்த பணம் கிடைச்சா நீங்க கடன் வாங்க வேண்டிய அவசியம் இல்லை என கூறுகிறார்.
இதுவரைக்கும் இதை எப்படி கண்டுபிடிப்பது என்று நான் கொஞ்சம் தயங்கினேன் ஆனால் இப்போ அத்தை பெர்மிஷன் கொடுத்துட்டாங்க அதனால நிச்சயம் கண்டுபிடித்து ஆகணும் ஆதாரத்தோடு கண்டுபிடிக்கிறேன் என முடிவெடுக்கிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.