தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் சந்தியா ஆதாரங்களை காட்டி ஆதியிடம் பணத்தை திருடிய விஷயம் பற்றி பேச உண்மையை ஒப்புக்கொள்ளும் ஆதி சந்தியாவின் காலில் விழுந்து என்னை மன்னிச்சிடுங்க. நான் பெரிய தப்பு பண்ணிட்டேன் கொஞ்சம் கொஞ்சமா கூட அந்த பணத்தை திருப்பிக் கொடுக்கிறேன். என பேச சந்தியா என்ன முடிவு எடுக்கணும்னு எனக்கு தெரியும் நீ என் கண்ணு முன்னாடியே நிக்காத என ஆதியை துரத்தி விடுகிறார்.
பிறகு ரூமில் யோசனையில் இருக்க சரவணன் எப்படியாவது பணத்தை திருடியவனை கண்டுபிடிக்க அப்பதான் நீங்க போலீசாக முடியும் அம்மா மனதை மாற்ற வேற வழி கிடையாது என கூறுகிறார். அதேபோல் ரவி சிவகாமியிடம் இது பற்றி பேச அவள் சந்தியா பணத்தை திருடியது யார் என கண்டுபிடித்தால் தான் போலீசாக முடியும். இல்லையென்றால் நான் அனுமதிக்க மாட்டேன் இதுதான் என்னுடைய முடிவு என உறுதியாக கூறிவிடுகிறார்.
இப்படியான நிலையில் மறுநாள் காலையில் எல்லோரும் உட்கார்ந்து கொண்டிருக்க அப்போது அங்கு வரும் சந்தியா சிவகாமியிடம் பணத்தை திருடியது யார் என கண்டுபிடிக்க முடியவில்லை என்னால் கண்டுபிடிக்க முடியாது. தயவுசெஞ்சு என்ன போலீஸ் ட்ரைனிங் அனுப்புங்க என பேச அர்ச்சனா பணத்தை திருடியது யாருன்னு சந்தியாவுக்கு தெரிந்திருக்கு. பணம் இந்த வீட்ல தான் இருக்கு. சிவகாமி பணத்தை கண்டுபிடிக்காமல் போலீஸ் ட்ரைனிங் அனுப்ப மாட்டேன். வீட்ல நடக்கிற திருட்டையே கண்டுபிடிக்க முடியலன்னா உனக்கு போலீஸ் ஆவதற்கு தகுதியே கிடையாது. நீ ஒரு தத்தி தத்தி தத்தி என திட்ட இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
பிறகு வெளியான ப்ரோமோ வீடியோவில் அர்ச்சனா பணத்தை திருடியது சந்தியா தான் என திசைத்திருப்ப அதைப்பற்றி சரவணன் ஆதியிடம் கேட்க அவன் அர்ச்சனா அண்ணி சொல்றத கொஞ்சம் யோசிச்சு பார்க்கலாம் என சொல்ல சரவணன் அவனை அடிக்கப் பாய்கிறார்.
