தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் சரவணன், செந்தில் என இருவரும் தேர்தலுக்காக நாமினேஷன் செய்ய செல்கின்றனர். முதலில் சரவணன் நாமினேஷன் செய்து விட்டு வெளியே வர பிறகு செந்தில் நாமினேஷன் செய்கிறார். வெளியே வந்த சரவணன் நிறுத்தி பரந்தாமன் உன் விரலை வைத்து எப்படி உன் கண்ணையே குத்துறேன் பார்த்தியா? என்ன பகைச்சிக்கிட்டா அப்படியே தூக்கி எறிஞ்சிடுவேன் என எச்சரிக்க சரவணன் அவருக்கு பதிலடி கொடுக்கிறார். பிறகு வெளியே வரும் செந்தில் பதவி ஆசை உனக்கு சொந்த தம்பிக்கு எதிரான நிற்கிறேன் என கண்டபடி பேச யாருக்கு ஆதரவு இருக்கு அவங்க ஜெயிச்சுட்டு போகட்டும் என சொல்லி சரவணன் அங்கிருந்து கிளம்புகிறார்.
அடுத்து ஷாப்பிங் வந்த சந்தியா ஜோதி மற்றும் சேட்டா என மூவரும் ஹோட்டல் ஒன்றுக்கு சாப்பிட செல்கின்றனர். அந்த ஹோட்டலில் பார் வசதி இருப்பதால் அது வேண்டாம் என சந்தியா சொல்ல ஜோதி மற்றும் சேட்டா அதெல்லாம் ஒன்றும் ஆகாது என சொல்லி அழைத்துச் செல்கிறார்கள். அங்கு ஒருவர் ஜோதியை பார்த்து கண்ணடித்து அசிங்கமாக பேச சேத்தா அவர்களிடம் சண்டை போட போக பிறகு இருவருக்கும் இடையே சண்டை உருவாகிறது. சந்தியா அந்த நபரை பளார் என அறைய இதை ஒரு பத்திரிக்கையாளர் வீடியோ எடுத்து குடிபோதையில் ஐஏஎஸ் பயிற்சியாளர்கள் ரகளை என டிவியில் பிரேக்கிங் நியூஸ் ஆக போட்டு விடுகின்றனர்.
அதன் பிறகு சரவணன் கடையில் சங்க நிர்வாகிகளிடம் பேசிக் கொண்டிருக்க அப்போது சந்தியா விடாமல் போன் செய்ய சரவணன் போனை எடுக்காமல் இருக்கிறார். அதன் பிறகு பிரேக்கிங் நியூஸ் ஆக டிவியில் சந்தியா ரகளை செய்த வீடியோ வெளியாக இதைப் பார்த்து ஈஸ்வரி மேடம் அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.