Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சந்தியாவை நினைத்து வருத்தப்படும் சிவகாமி.சந்தியாவிடம் மன்னிப்பு கேட்ட ஜெஸி.இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்

raja-rani-2 serial episode-update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் சந்தியா சரவணன் இடம் கெளரி மேடம் லீவு கேட்டபோது நீ நல்ல மருமகளா இருக்க ஆசைப்படுகிறாயா அல்லது நல்ல போலீஸ் அதிகாரியா இருக்க ஆசைப்படுறியா என கேட்க இரண்டும் தான் என பதில் சொன்னதுக்கு அது நிஜத்தில் நடக்காது என சொல்ல சரவணன் உங்களால இரண்டையும் பேலன்ஸ் பண்ண முடியும் என ஆறுதல் கூறுகிறார்.

அடுத்து சிவகாமி சந்தியாவிடம் நீ எவ்வளவு ஒல்லியா ஆகிட்ட, கண்ணெல்லாம் உள்ள போயிடுச்சு என சொல்லி வருத்தப்பட்டுக் கொண்டிருக்க பிறகு நீங்க தான் ரொம்ப டல்லா இருக்கீங்க என சந்தியா சொல்ல கண்டதை நினைச்சு கஷ்டப்பட்டு இருந்தா இப்படித்தான் என ரவி கூறுகிறார். உடனே தேர்தல் விஷயம் குறித்து பேச ஆரம்பிக்க சந்தியா எல்லாம் நல்லதாகவே நடக்கும் செந்தில் தப்பான இடத்துல மாட்டிக்கிட்டு இருக்கார் என்பதை புரிஞ்சுப்பாரு என சந்தியா கூறுகிறார்.

அதன் பிறகு சந்தியா ஜெசி கடைக்கு சென்று ஜெசி சந்தித்து பேச ஜெசி ஆதி செய்த விஷயத்துக்காக மன்னிப்பு கேட்கிறார். அதெல்லாம் எப்பவோ நடந்து விஷயம் இப்போது மறந்திடு என சந்தியா சொல்ல நீ இவ்வளவு பெருந்தன்மையா நடந்துக்கிறேன் ஆனா சம்பந்தமே இல்லாத அர்ச்சனா அக்கா இத பத்தி ரொம்ப மோசமா பேசுறாங்க என்ன சொல்ல அர்ச்சனா பேசுறது யாரும் குடும்பத்துல பெருசா எடுத்துக்க மாட்டாங்க நீயும் அப்படி இரு என சந்தியா கூறுகிறார்.

அதன் பிறகு சந்தியா மற்றும் சரவணன் இருவரும் பைக்கில் வெளியில் ஊர் சுற்ற ஜோதி வீடியோ கால் செய்து சந்தியா சரவணனிடம் பேசுகிறார். பிறகு கோவிலுக்கு சென்று சாமி கும்பிடுகின்றனர். சரவணன் நீங்க ஊருக்கு போயிடுவீங்க நாளைக்கு எனக்கு கஷ்டமா இருக்கும் என சொல்லி வருத்தப்படுகிறார். இத்துடன் இன்றைய சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

அடுத்து வெளியான ப்ரோமோ வீடியோவில் அர்ச்சனாவின் அப்பா அம்மா செந்தில் ஜெயிப்பதற்காக பூஜை செய்ய அப்போது ஐயர் வெற்றி உங்களுக்குத்தான் உங்களை எதிர்த்து நிற்கிறார்கள் தடம் தெரியாமல் காணாமல் போயிடுவாங்க என்ன சொல்ல சிவகாமி என் ஒரு புள்ள இருக்க இடம் தெரியாம போயிடுவானு சொல்லும்போது என் வயிறு பத்தி எரியுது என அழுகிறார்.

raja-rani-2 serial episode-update
raja-rani-2 serial episode-update