தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் அர்ச்சனாவின் கடைக்கு சிலர் முகூர்த்த புடவை எடுக்க வந்திருக்க அப்போது அவர்களுக்கு ஜெசி போன் செய்து எப்போது பார்லருக்கு வருவீங்க என பேசுகிறார்.
ஜெசி பேசுவது அறிந்து கொண்ட அர்ச்சனா அவர்களிடம் அந்த பார்லர் சரியில்லன்னு நிறைய கம்ப்ளைன்ட் வருது பார்த்து நடந்துக்கோங்க என சொல்லி அவர்களை அந்த கடைக்கு போக விடாமல் தடுக்க சூழ்ச்சி செய்கிறார். அதன் பிறகு மீண்டும் ஜெசி போன் செய்ய அப்போது அவர்கள் என்னமா உன் கடைப்பத்தி ரொம்ப தப்பு தப்பா சொல்றாங்க என சொல்ல யார் சொன்னது என்ன எது என கேட்க இவர்கள் பேச்சு வாழ்க்கையில் இங்கே ஒரு ஜவுளி கடைக்கு வந்தோம் என அர்ச்சனா கடைப்பற்றி உளறி விடுகின்றனர்.
உடனே ஜெஸ்ஸி அக்கா இங்க பியூட்டி பார்லர் பக்கத்துல ஒரு துணி கடை இருக்கு அங்க துணி நல்லாவே இருக்காது போன மாசம் அப்படித்தான் இருபதாயிரம் கொடுத்து எனக்கு தெரிஞ்சவங்க ஒரு புடவை வாங்கிட்டு போனாங்க ரெண்டே மூலம்தான் கட்டித்த வச்சாங்க கலர் மொத்தமும் போயி நூல் எல்லாம் வெளியே வந்துடுச்சு என சொல்ல கடைசியில் அவர்கள் அர்ச்சனா கடையில் துணி வாங்காமல் சென்று விடுகின்றனர். அர்ச்சனா நான் உனக்கு ஆப்பு வைக்கலாம்னு பார்த்தா நீ எனக்கே ஆப்பு வைக்கிறியா என கோபப்படுகிறார்.
இன்னொரு பக்கம் சரவணன் சந்தியாவுக்கு போன் போட சுவிட்ச் ஆஃப் எனக்கு வருவதால் என்ன ஆச்சுன்னு தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறார். மறுபக்கம் செந்தில் பரந்தாமனை சந்திக்க சென்றிருந்த நேரத்தில் பரந்தாமன் அவனிடம் பணத்தை கொடுத்து குடிக்க வைத்து சரவணன் பற்றி தவறான அபிப்ராயங்களை உருவாக்கி விடுகிறார்.
அடுத்து பயிற்சி நடக்கும் இடத்தில் முக்கியமான போட்டி நடக்கப் போவதாகவும் அதற்காக பெற்றோரிடம் கையெழுத்து வாங்கி அந்த பார்மை சமர்ப்பித்த பிறகு தான் அவர்கள் இந்த போட்டியில் கலந்து கொள்ள முடியும் என கூறுகின்றனர். சந்தியா இன்னைக்கு ஆப்ஷன் என்பதால் அவருக்கு திரும்பவும் வந்து கேட்டாலும் இந்த வாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது என கௌரி மேடம் சொல்லிக் கொண்டிருக்க அப்போது சந்தியா என்ட்ரி கொடுத்து நானும் இந்த போட்டிகள் கலந்து கொள்கிறேன் என கலந்து கொள்கிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
அதன் பிறகு வெளியான ப்ரோமோ வீடியோவில் அர்ச்சனா ஜெஸ்ஸி கடைக்கு வந்து ஜெஸியிடம் சண்டையிட அதை சிவகாமி பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.
