தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கௌரி மேடம் பயிற்சியாளர்களுடன் சமூக விரோதிகள் நடமாட்டம் உள்ள காட்டுக்குள் சென்று பயிற்சி கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
அடுத்து ஆதி ஜெசி கடைக்கு சென்று இருந்தபோது அங்கு பணத்துக்காக என்ன செய்வது என யோசித்துக் கொண்டிருக்க அப்போது மேக்கப் செய்ய வந்திருந்த பெண்மணி ஒருவர் தன்னுடைய செயினை மேஜை மீது கழட்டி வைத்திருக்க அதை பார்த்த ஆதி இதை திருடி பணத்தை தயார் செய்யலாம் என முடிவெடுத்து நகையை திருடி விடுகிறார்.
பிறகு சரவணன் வீட்டுக்கு வந்து கொண்டிருக்கும்போது யாரோ ஒருவர் அடிபட்டு ரோட்டில் கிடப்பது போல விழுந்து கிடக்க சரவணன் யாரென சென்று போய் பார்க்க பிறகு அடியாட்கள் சூழ்ந்து அவரை அடித்து மடக்கி பிடித்து வாயில் சரக்கு ஊற்றி விடுகின்றனர். இதனால் சரவணன் ரோட்டோரத்தில் விழுந்து கிடக்கிறார்.
மறுபக்கம் சந்தியாவுக்கு சரவணனுக்கு ஏதோ பெரிய ஆபத்து இருப்பதாக தோன்றி கொண்டே இருக்க அவர் ஜோதிடம் சொல்லி வருத்தப்பட அங்கு வரும் கௌரி மேடம் சந்தியாவை இங்கு வந்து உனக்கு குடும்ப செண்டிமெண்ட் தானா என திட்டி தீர்க்கிறார்.அடுத்ததாக சாலையில் நடந்து வருபவர்கள் சரவணனை பார்த்து அதிர்ச்சி அடைந்து அவரை வீட்டுக்கு கொண்டு வந்து விடுகின்றனர். சரவணன் குடித்து விழுந்து கிடந்ததாக சொல்ல சிவகாமி நம்ப மறுக்கிறார். என் புள்ள அப்படி பண்ணுவானு அந்த கடவுளே இறங்கி வந்து சொன்னா கூட நான் நம்ப மாட்டேன் என உறுதியாக சொல்ல பிறகு சரவணன் முகத்தில் தண்ணீர் தெளித்து நடந்தது என்ன என கேட்க நான் சத்தியமா குடிக்கல அந்த பரந்தாமனோட ஆளுங்க தான் என்ன பிடிச்சு அடிச்சு வாயில தண்ணி ஊத்தி விட்டாங்க என சொல்கிறார்.
இதனால் சிவகாமி பரந்தாமனைத் திட்ட செந்தில் மா அவங்க இது குடிச்சிட்டு குடிபோதையில் உளறுகிறான். நீ யாருன்னு தெரியாதவங்களுக்கு சாபம் விட்டுட்டு இருக்க என்ன சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
