தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சந்தியா துப்பாக்கி சூடு நடந்த விஷயத்தை பற்றி யோசித்து கொண்டு இருக்க அப்போது சரவணன் இடம் கெளரி மேடம் ஒரு போன் பண்ணி குடுங்க என சொல்ல சரவணன் போன் பண்ண கௌரி மேடம் எடுக்காமல் இருக்கிறார்.
அடுத்து சிவகாமி எல்லாரும் இருக்கும் போது அனைவரையும் அழைத்து இனி சந்தியா பயிற்சிக்கு போக வேண்டாம் என சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார். சந்தியா சரவணன் சிவகாமியை சமாதானம் செய்யும் முயற்சி செய்ய இதுதான் என்னுடைய கடைசி முடிவு என சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.
இதையடுத்து செந்தில் வண்டியில் சென்று கொண்டிருக்கும் போது பரந்தாமன் போன் செய்ய முதலில் செந்தில் எடுக்க முடியாமல் போகிறது. பிறகு மீண்டும் போன் வர செந்தில் எடுத்துப் பேச பரந்தாமன் என்னப்பா தேர்தல் முடிந்ததும் ஆளையே மறந்துட்டேன் கொஞ்சம் வந்துட்டு போ கணக்குப் பார்க்க வேண்டிய வேலை இருக்கு என சொல்ல செந்தில் நான் என்ன தலைவரே பண்ண போறேன் நீங்க பார்த்து சொன்னா எல்லாம் சரிதான் என சொல்கிறார்.
என்னதான் இருந்தாலும் ஒரு முறைனு ஒன்னு இருக்குல்ல வந்துட்டு போ என சொல்ல செந்தில் பரந்தாமனை சந்திக்க அவர் உனக்காக தேர்தலில் செலவு செய்த ஐம்பது லட்சம் ரூபாய் பணத்தை எடுத்து வை என சொல்ல செந்தில் அதிர்ச்சி அடைகிறார். இதை கேட்டதும் செந்தில் அதிர்ச்சி அடைந்து என தலைவரே என்கிட்ட பணம் கேட்கிறீங்க என சொல்ல உன்கிட்ட கேட்காம வேற யார் கிட்ட கேட்பாங்க தேர்தல்ல ஜெயிச்சிருந்தா பரவாயில்லை, எவனுக்கோ ஒருத்தனுக்கு 50 லட்சத்தை தூக்கி கொடுக்க நான் என்ன முட்டாளா என கோபமாக பேசுகிறார்.
மேலும் செந்தில் கையெழுத்து போட்ட பத்திரத்தை காட்டி சீக்கிரம் பணத்தைக் கொடு இல்லனா இத வச்சு கேஸ் போடுவேன் அப்புறம் நீ காலம் முழுக்க ஜெயில்ல கம்பி எண்ண வேண்டியதுதான் என எச்சரிக்கிறார்.
அதன் பிறகு அர்ச்சனா மயிலுவிடம் குழந்தையை கொடுத்துவிட்டு பக்கத்து வீட்டுக்கு சென்று குழந்தையை தூக்கி வந்து ரூமுக்குள் சென்று பால் கொடுக்கிறார். அப்போது எல்லோரும் வெளியே கூடிவிட அர்ச்சனா என்ன செய்வது என தெரியாமல் தவிக்கிறார். பிறகு ரவியும் சிவகாமியும் கடைக்கு கிளம்பிச் சென்று விட சந்தியா குழந்தையை கொஞ்சி விட்டு ரூமுக்குள் சென்று அர்ச்சனாவை பார்க்க போகிறார்.
குழந்தையையும் அர்ச்சனாவையும் மாத்தி மாத்தி பார்க்க அர்ச்சனா என்ன என்று கேட்க குழந்தையுடன் முகம் எங்கேயோ பார்த்து பதிந்த மாதிரியே இருக்கு என சொல்ல அர்ச்சனா அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
