Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சந்தியா எடுத்த அதிரடி முடிவு. பதற்றத்தில் சிவகாமி. இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்

raja rani 2 serial episode update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சிவகாமி போட்ட கோட்டை மீறி சந்தியா போலீஸ் ட்ரைனிங் இருக்கு கிளம்பி செல்ல சரவணன் இந்த நேரத்தில் சந்தியாவோட நான் இருக்கணும் என்ன ரெண்டு பேரும் மன்னிச்சிடுங்க கிளம்பி விடுகிறார்.

இரவு நேரத்தில் எல்லோரும் குளிரில் உட்கார்ந்திருக்க அப்துல் டீ போட்டு தருவதாக சொல்லி டீ போட அவர் கரி துணியை எடுக்க நகர்ந்த போது யாரோ ஒருவர் டி-யில் மயக்க மருந்து கலந்து விட அதைக் குடித்த எல்லோரும் மயங்கி விழ செல்வம் உட்பட தீவிரவாதிகள் கௌரி மேடமை கடத்துகின்றனர்.

சரவணன், சந்தியா என இருவரும் போலீஸ் கேம்பிற்கு வந்து சேர அங்கு வேறு புதிய ஆபீசர்கள் இருப்பதை பார்த்து சந்தியா குழப்பமாக இவர்கள் இருவரையும் பார்த்ததும் போலீஸ் சுற்றி வளைக்கிறது. பிறகு கௌரி மேடம் கடத்தப்பட்டதால் இருவரும் இங்கிருந்து போக முடியாது என போலீஸ் கஸ்டடியில் எடுக்கிறது.

அடுத்து அப்துல்லை போலீஸ் விசாரிக்க அப்துல் எதுவும் சொல்லாமல் இருக்க பிறகு அப்போது போலீஸ் அவனைப் பற்றி எல்லோரிடமும் கேட்க ட்ரைனிங்கில் இருந்த போலீஸ் அதிகாரி பற்றி நல்லவிதமாகவே கூறுகிறார். அது மட்டுமல்லாமல் எல்லோரும் அவர்களை பற்றி நல்லவிதமாக சொல்ல ஜோதி கேம்பஸை ரிப்பேர் செய்தது, சந்தியாவுக்கு கிடைத்த லட்டர் குறித்து சொல்ல அப்போ அந்த கருப்பு ஆடு அப்துல் தான் என போலீஸ் முடிவு செய்கிறது. விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரித்தால் எல்லா உண்மையும் வரும் என முடிவெடுக்கின்றனர்.

மறுபக்கம் இந்த விஷயம் தெரிந்து சிவகாமி சரவணன் சந்தியாவுக்கு போன் போட இருவரது மொபைலையும் சுவிட்ச் ஆஃப் என வருகிறது. இந்தப் பக்கம் கௌரியை கடத்திய செல்வம் உங்கள வச்சு எப்படி என்னுடைய வேலையை முடிக்கிறேன் என்று பாருங்கள் என சொல்ல இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

அதன் பிறகு வெளியான ப்ரோமோ வீடியோவில் சந்தியா ஒரு முக்கிய ஆதாரம் கிடைத்திருப்பதாகவும் இந்த கருப்பு ஆடு யார் என்பதை இங்கே எல்லோரும் முன்னாடியும் நிறுத்தப் போகிறேன் என சொல்கிறார்.

raja rani 2 serial episode update

raja rani 2 serial episode update