தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சந்தியா உட்பட எல்லோரும் தீவிரவாதிகளில் நெருங்கி செல்ல கன்னிவெடி சத்தம் கேட்டு தீவிரவாதிகளும் சந்தியாவின் குழுவை எதிர்த்து சண்டையிட தயார் நிலையில் இருக்கின்றனர்.
மறைந்திருந்து தீவிரவாதிகள் மீது துப்பாக்கி சூடு நடத்த செல்வம் அப்துல் தலையில் துப்பாக்கியை வைத்து அனைவரையும் சரண்டர் செய்ய வைக்கிறான். பிறகு எல்லோரையும் சேரில் கட்டி வைக்கிறான். இவங்க எல்லாரும் அப்படியே கொளித்திட வேண்டும் என திட்டம் போடுகிறான்.
இப்படியான நிலையில் இந்த பக்கம் சிவகாமியின் அக்கம் பக்கத்தார் வீட்டுக்கு வந்து சந்தியாவை பற்றியும் சரவணன் பற்றியும் பேசி செல்கின்றனர். மறுபக்கம் காட்டுக்குள் வனகாளிக்கு பூஜை நடைபெறுகிறது. செல்வம் சந்தியா உனக்கே இந்த டிரஸ் நல்லா இல்ல கழட்டிலாம் என சொல்லி துணியை கழட்ட போக சரவணன் கோபப்பட செல்வம் சரவணனை கன்னத்தில் அடித்து துன்புறுத்தி கீழே சரிய வைக்கிறான்.
பிறகு சந்தியாவின் துணியை கழட்ட பார்க்க அப்போது வனக்காளி சரவணனுக்குள் இறங்க ஆக்ரோஷமாக சத்தம் போடுகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.