தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் அர்ச்சனா என்ற கதாபாத்திரத்தில் விஜே அர்ச்சனா நடித்து வருகிறார்.
தற்போது கர்ப்பமாக இருப்பது போல நடித்து வரும் இவர் இந்த சீரியலில் இருந்து விலகப் போவதாக தகவல் வெளியானது. ஆனால் தொடர்ந்து இவர் விலகாமல் நடித்து வந்த நிலையில் தற்போது இந்த சீரியலில் இருந்து விலகி உள்ளார்.
அவருக்கு பதிலாக புதிய நடிகை நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அவருடைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
