Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

போலீசால் கைது செய்யப்பட்ட செந்தில் அர்ச்சனா… அதிர்ச்சியில் குடும்பத்தினர் … இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட்

Raja Rani2 Serial Episode Update 03.02.22

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் செந்திலும் அர்ச்சனாவும் கொஞ்சிக் குலவி கொண்டிருக்க செந்தில் கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு பாத் ரூம் போயிட்டு வரேன் என அவர் பாத்ரூமிற்கு செல்கிறார். இந்த நேரத்தில் போலீஸ் ரூமின் கதவை தட்ட அர்ச்சனா திறந்து யார் நீங்கள் என கேட்கின்றார். நீ மட்டும் தான் இருக்கியா இல்ல உள்ள வேற யாராச்சும் ஒளிஞ்சிட்டு இருக்காங்களா என கேட்கிறார்.

நீங்க ரூம் மாத்தி வந்துட்டீங்க என்று நினைக்கிறேன் என அர்ச்சனா சொல்ல அதெல்லாம் நாங்க சரியாத்தான் வந்து இருக்கோம் என கூறுகின்றனர். இப்ப நீங்க வெளியில போறீங்களா இல்லனா போலீஸை கூப்பிடட்டுமா என அர்ச்சனா சொல்ல நாங்களே போலீஸ் தான் என சொல்லி அதிர்ச்சி கொடுக்கின்றனர்.

உடனே அர்ச்சனா என்னங்க என பாத்ரூமில் இருக்கும் செந்திலுக்கு குரல் கொடுக்கிறார். அவனே நாங்க பிடிக்கிறோம் நீ வந்து வண்டியில ஏறு என அர்ச்சனாவை இழுத்துச் செல்கின்றனர். இந்த நேரத்தில் பாத்ரூமிலிருந்து ஓடி வந்த செந்தில் போலீஸ் என தெரியாமல் அவரை அறைந்து விடுகிறார். போலீஸ் மேலயே கையை வைக்கிறியா என செந்திலை அடிக்கின்றனர். இது எத்தனாவது ஆளு என அர்ச்சனாவை கேட்கின்றனர். இருவரும் நீங்க எங்களை தப்பா புரிஞ்சுகிட்டு இருக்கீங்க நாங்க ரெண்டு பேரும் husband-wife என கூறுகின்றனர். அதெல்லாம் வந்து ஸ்டேஷன்ல பேசிக்க என அவர்களை இழுத்துச் செல்கின்றனர்.

போலீஸ் ஸ்டேஷனிலும் செந்தில் நாங்க ரெண்டு பேரும் உண்மையாகவே புருஷன் பொண்டாட்டி நம்புங்க என கெஞ்சி கேட்கின்றனர். எல்லாரும் இப்படித்தான் சொல்லுவாங்க சரி உன் வீட்ல இருக்கு உங்க பேரை சொல்லு போன் நம்பர் குடு என கேட்க செந்தில் அதெல்லாம் வேண்டாம் அவங்களுக்கு தெரிஞ்சா ரொம்ப வருத்தப்படுவாங்க என கூறுகிறார். ‌ அப்புறம் எப்படி நீங்க புருஷன் பொண்டாட்டினு நம்புவது என போலீஸ் கேட்கிறார்.

இந்த பக்கம் சந்தியா வருத்தத்தோடு அமர்ந்து கொண்டே இருக்க அங்கே வந்த சரவணன் எங்க போயிட்டு வந்திங்க என கேட்க சந்தியா எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார். நீங்க போலீஸ் ஸ்டேஷனுக்கு தான் போயிட்டு வந்தீங்கன்னா எனக்கு தெரியும். பணம் காணாமல் போன விஷயமா போயிட்டு கம்ப்ளைன்ட் கொடுத்துட்டு வந்திருக்கீங்க என தவறாக புரிந்து கொண்டு அவரிடம் கோபப்பட்டு சென்று விடுகிறார். சந்தியா என்ன செய்வது என தெரியாமல் தவிக்கிறார் இவரிடமாவது மற்ற உண்மைகளையும் சொல்லி விட வேண்டும் என முடிவு செய்கிறார்.

வேறு வழியில்லாமல் சென்று போலீசாரிடம் சரவணன் மொபைல் நம்பரை கொடுக்கின்றனர். அவர்கள் சரவணனுக்கு ஃபோன் செய்து செந்தில் அர்ச்சனா உங்களுக்கு தெரியுமா எனக் கேட்டு உடனே குற்றாலம் போலீஸ் ஸ்டேஷனுக்கு வர சொல்கின்றனர். இந்த நேரத்தில் கடைக்கு வந்த சந்தியாவிடம் நான் அவசரமா வெளியில போறன் வீட்ல யாராச்சும் கேட்டா அவசர வேலையா போயிருக்கேன் சொல்லிடுங்க என கிளம்பிச் செல்கிறார்.

வீட்டுக்கு வந்த சந்தியா சிவகாமியிடம் அவர் அவசர வேலையா வெளிய போயிருக்கார் என கூறி விடுகிறார். எங்க போற என்ன ஏதுன்னு எதுவும் சொல்லவில்லை என சொல்கிறார். போலீஸ் ஸ்டேஷனில் அர்ச்சனாவை பிடித்து எல்லாம் உன்னால தான் என செந்தில் திட்டுகிறார். இந்த நேரத்தில் போலீஸ் ஒருவர் வந்து இவர்களை திட்ட பிறகு சரவணன் பற்றிய தகவல்களையும் செந்தில் சொல்ல அவர் தம்பியா அவருக்கு இப்படி ஒரு தம்பியா என தலையில் அடித்து கொண்டு செல்கிறார்.

இப்ப கூட சரவணன் பேரை சொன்னதால தான் சத்தம் போடாம போனாங்க என செந்தில் சொல்ல இப்பவும் உங்க அண்ணன் புராணமா என அர்ச்சனா கடுப்பாகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 எபிசோட் முடிவடைகிறது.

Raja Rani2 Serial Episode Update 03.02.22
Raja Rani2 Serial Episode Update 03.02.22