தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. விழா மேடையில் சந்தியா எழுதிய லெட்டரை படித்து பார்த்து அதிர்ச்சி அடைகிறார் சரவணன். பிறகு சரவணன் அமைதியாக இருந்ததால் கொண்டிருந்தவர்கள் சரவணனை பேச சொல்ல அவர் சந்தியா, என் அம்மா தான் இந்த வெற்றிக்கு காரணம், அவங்க இல்லனா நான் ஜெயித்து இருக்க மாட்டேன் என சிம்பிளாக பேச்சை முடிக்கிறார். அதன் பின்னர் இவர்கள் வீட்டுக்கு வர ஹாயாக அமர்ந்து கொண்டு இருந்த அர்ச்சனா அப்படியே முடியாதது போல நடிக்க தொடங்கி விடுகிறார்.
சிவகாமி வந்து நலம் விசாரித்து விட்டு உள்ளே படுக்க சென்று விடுகிறார். பின்னர் ரூமுக்கு போன சரவணனை பார்த்து சந்தியா மகிழ்ச்சி அடைகிறாள். சரவணனை கட்டி பிடித்து வாழ்த்து கூறுகிறார். அதன் பின்னர் சரவணன் எல்லோருக்கும் சின்ன வயதில் இருந்தே ஒரு கனவு இருக்கும் உங்களுக்கு அப்படி என்ன ஆசை என கேட்க சந்தியா எதை எதையோ சொல்லி சமாளிக்க முயற்சி செய்கிறார். ஆனால் சரவணன் நீங்க ஏன் எங்கிட்ட நிறைய மறைக்கறீங்க? என் மேல இன்னமும் நம்பிக்கை வரலையா என சொல்லி விட்டு வெளியே சென்று விடுகிறார். இதனால் சந்தியா உங்கள் கிட்ட சொல்ல முடியாத சூழ்நிலை, மன்னிச்சிடுங்க என மனதுக்குள் சொல்லிக் கொள்கிறார்.
அதன் பின்னர் இந்த பக்கம் அர்ச்சனா ஆம்பள பையனா பெத்து கொடுத்தா அத்தை ரொம்ப சந்தோஷப்படுவாங்க, இனிமே ஆம்பள பையன் தான் பொறக்கனும் என கூறுகிறார். இதனால் இனிமே ஆம்பள சாமியை தான் கும்பிடணும், ஆம்பள பையன் போட்டோவா பார்க்கணும் என பேசிக் கொண்டு இருக்கிறார்.
சரவணன் சந்தியாவின் அண்ணனை சந்தித்து சந்தியாவின் கனவு பற்றி கேட்டு மொத்த விஷயத்தையும் தெரிந்து கொள்கிறார். மேலும் சந்தியாவின் அப்பா அம்மாவை இறப்பதற்கு முன்பாக பார்த்த விஷயத்தையும் கூறுகிறார். சந்தியாவின் கனவை நிறைவேற்ற வேண்டியது எனது கடமை என சபதம் எடுக்கிறார்.
பின்னர் சந்தியாவிடம் சென்று திரும்பவும் கனவு பற்றி பேச அவர் விஷயத்தை சொல்லாமல் எதை எதையோ பேசி மழுப்ப பார்க்கிறார். நாளைக்கு காலையில உங்கள் வாயாலையே உண்மையை சொல்ல வைக்கிறேன் என சரவணன் மனதுக்குள் சொல்லிக் கொள்கிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 எபிசோட் முடிவடைகிறது.
