Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சந்தியாவை மாட்டிவிட அர்ச்சனா போட்ட திட்டம்.. சரவணனுக்கு சிவகாமி கொடுத்த ஷாக்.. இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்

Raja Rani2 Serial Episode Update 07.03.22

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் சந்தியா தன்னுடைய கனவு பற்றிய தகவல் என்னிடம் சொல்ல இனி உங்களுடைய கனவில் என்னுடைய கனவு என்ன பிரச்சினை வந்தாலும் அதை எதிர்த்து நின்று நான் உங்களை போலீசாக்குவேன். இனிமே நீங்க போலீசாக என்ன படிக்கணுமா அதை படிங்க என கூறுகிறார்.

இதைக் கேட்ட சந்தியா வேண்டவே வேண்டாம் அத்தை இதுக்கு ஒத்துக்க மாட்டாங்க வீட்டுல தேவையில்லாத பிரச்சினை வரும் குடும்பம் இரண்டாக உடையும் வேண்டாம் என சொல்கிறார். அம்மா கண்டிப்பா கோப படுறாங்க என அவர்களிடம் பேசி எடுத்துச் சொல்லி உங்களை போலீஸாக்க வேண்டியது என்னுடைய கடமை என வாக்கு கொடுக்கிறார்.

இந்த பக்கம் சந்தியாவின் ரூமில் இருந்து அவருடைய அப்பா அம்மாவின் போட்டோவை எடுத்துக்கொண்டு சிவகாமியிடம் காண்பித்து சிக்க வைக்க முயற்சி செய்கிறார் அர்ச்சனா. போட்டோவை பார்த்து சிவகாமி கோபப்படாமல் இது அவனுடைய உணர்வு போட்டோவில் எங்கே இருந்து எதையோ எங்கேயோ கொண்டு போய் மாட்டி விடு என திட்டி அனுப்புகிறார். அர்ச்சனா அத்தை சந்தியா மேல கடுமையாகக் கோபப்படுவார் நினைச்சா என் பக்கம் திரும்பறாங்க என புலம்பி கொண்டே செல்கிறார்.

அதன் பிறகு வீட்டிற்கு வந்த சரவணன் சந்தியாவிடம் சொன்னது ஞாபகம் இருக்கு இல்ல படிங்க என கூறுகிறார். புக்ஸ் ஏதாவது வாங்கனும்னா சொல்லுங்க வாங்கி தரேன் என சொல்கிறார். இல்ல அதெல்லாம் என்கிட்டயே கொஞ்சம் இருப்பீர்கள் என சொல்லி புத்தகங்களை எடுத்து வருகிறார் சந்தியா. அவருக்கு டீ போட்டுக் கொடுத்து இரவெல்லாம் படிக்க வைக்கிறார் சரவணன்.

இந்த பக்கம் அர்ச்சனா ரூமுக்குள் புலம்பிக் கொண்டிருக்கிறார் அந்த நேரத்தில் செந்தில் வருகிறார். பிறகு குல்பி ஐஸ் வர எனக்கு ஐஸ் வேண்டும் என அடம் பிடிக்கிறார். அர்ச்சனாவின் தொல்லை தாங்காமல் அவரை ஐஸ் வாங்கி கொடுக்க கூட்டிச் செல்கிறார் செந்தில். எனக்கு இரண்டு வேண்டும் என இரண்டு வாங்கிக் கொள்கிறார். பிறகு மயிலும் இங்கு வந்து எனக்கும் குல்ஃபி வேண்டும் என கேட்கிறார். பிறகு அவருக்கு ஒன்று வாங்கிக் கொள்கிறார். அதை பின்னர் சென்று தனக்கு ஒரு குல்பி வாங்கிக்கொள்ள தெருவில் இருந்த சின்ன பசங்க ஓடிவந்து எங்களுக்கும் ஐஸ் வாங்கித் தாங்க என கேட்கின்றனர். அவர்களுக்கும் ஐஸ் வாங்கி கொடுக்கிறார் செந்தில்.

நான் கேட்டதுக்கு வாங்கித் தர மாட்டேன்னு சொன்னீங்க இப்ப அந்த கொடி பசங்களுக்கு எல்லாம் ஐஸ் வாங்கி கொடுக்கறீங்க அர்ச்சனா கேட்க உனக்கு சளிபிடித்தால் என்ன பண்றது வைத்திருக்க குழந்தைக்கும் ஏதாவது பிரச்சனை வரும்னு தான் வேண்டாம்னு சொன்னேன் என்று கூறுகிறார். அதற்கு அடுத்ததாக மூவரும் உள்ளே செல்ல சந்தியாவின் ரூமில் லைட் எரிவது பார்த்த அத்தனை என்ன நடக்கிறது என எட்டிப் பார்க்கிறார்.

சந்தியா கையில் புத்தகங்களை வைத்து படித்துக் கொண்டிருப்பதை பார்த்து சரவணனை தூங்க வைத்துவிட்டு நீ படிக்கிறியா அத்தை கிட்ட போட்டு கொடுத்து இத பெரிய பிரச்சனையாக்குறேன் என கூறுகிறார். பின்னர் சரவணன் நைட்டு எவ்வளவு நேரம் படிச்சு எப்ப தூங்கினேன் என்பதே தெரியலை இவ்வளவு ஆசையை மனசுக்குள்ள வெச்சிக்கிட்டு எப்படி இப்படி பொறுமையா இருக்க முடிந்தது. இன்னைக்கு அம்மா கிட்ட இதைப் பற்றி பேசியே ஆகணும் என முடிவு செய்கிறார் சரவணன்.

Raja Rani2 Serial Episode Update 07.03.22
Raja Rani2 Serial Episode Update 07.03.22